டிடிவி தினகரன் வீட்டில் பரபரப்பு – ஒரே நேரத்தில் 50 அமமுக நிர்வாகிகள் ராஜினாமா

by Lifestyle Editor

சென்னை அடையாறில் உள்ள அமுமுக டிடிவி தினகரன் வீட்டிற்கு அந்த மலையைச் சேர்ந்த 50 நிர்வாகிகள் ராஜினாமா கடிதத்துடன் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது.

பூந்தமல்லி அமமுக நகரச் செயலாளர் கந்தன். இவர் சசிகலாவுக்கு மிகவும் நெருக்கமாக இருந்து வந்தவர். கடந்த டிசம்பர் 24ஆம் தேதியன்று எம்ஜிஆர் நினைவு தினத்திற்கு சென்னைக்கு வந்து அஞ்சலி செலுத்தி விட்டு திரும்பும் போதே கட்சியிலிருந்து அவரை நீக்கி அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார் தினகரன்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பூந்தமல்லி நகர பொறுப்பாளர்கள் 50 பேரும் ராஜினாமா கடிதங்களுடன் டிடிவி தினகரன் வீட்டிற்கு நேற்று மாலை சென்றிருக்கிறார்கள். அப்போது அவர்களை தடுத்த பாதுகாப்பு போலீசார், எதற்கு இத்தனை பேர் திரண்டு வருகிறீர்கள் என்று கேட்க, விவரத்தைச் சொல்லவும் போலீசார் உடனே தினகனை தொடர்புகொண்டு விவரத்தைச் சொல்லி இருக்கிறார்கள்.

அதற்கு, நான் தற்போது வீட்டில் இல்லை. வீட்டில் தொட்டி என் உதவியாளர் தான் இருக்கிறார். அவரை அனுப்பி வைக்கிறேன். அவரிடம் ராஜினாமா கடிதத்தை கொடுத்து விட்டு செல்லச் செல்லுங்கள் என்று சொல்லியிருக்கிறார். அதன்படியே , பூந்தமல்லி அமமுக பொறுப்பாளர்களிடம் சொல்ல அவர்களும் தினகரனின் உதவியாளர் தினேஷிடம் ராஜினாமா கடிதத்தை கொடுத்து விட்டு, கண்டம் கோஷம் எழுப்பிச் சென்றிருக்கிறார்கள்.

ஒரே நேரத்தில் 50 பேர் திரண்டு வந்து ராஜினாமா கடிதம் கொடுத்து இருப்பது அப்பகுதியில் பரபரப்பையும் அமமுகவில் சலசலப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது.

Related Posts

Leave a Comment