வெண்பாவை காப்பாற்ற துடிக்கும் பாரதி… மகனுக்கு சவால் விடும் சௌந்தர்யா

by Column Editor

வெண்பாவை காப்பாற்ற துடிக்கும் பாரதியை பார்த்து கோபமான சௌந்தர்யாவின் ப்ரோமோ வெளியாகியுள்ளது.

விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகி வரும் விறுவிறுப்பான சீரியல் பாரதி கண்ணம்மா. இந்த சீரியலில் பல ஆண்டுகளுக்கு முன்பு பிரிந்த கணவன், மனைவியான, பாரதியும், கண்ணம்மாவும் எப்போது ஒன்று சேருவார்கள் என்று ரசிகர்கள் காத்திருந்தனர். இதையடுத்து இவர்கள் ஒன்று சேருவது போன்று கதைக்களம் அமைக்கப்பட்டு சமீபகாலமாக எபிசோடுகள் நகர்ந்து வந்தது.

இந்நிலையில் திடீரென கண்ணம்மாவுக்கு பாரதி விவாகரத்து நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இதை பார்த்த கண்ணம்மா அதிர்ச்சி அடைந்து கதறி அழுகிறார். அதன்பிறகு ஒரு கட்டத்தில் மனதை தேற்றிக்கொள்ளும் கண்ணம்மா, தனது மாமியார் சௌந்தர்யாவிடம் சென்று பாரதி விவாகரத்து நோட்டீஸ் விஷயத்தை போட்டு உடைகிறார். பாரதி என்னை விவாகரத்து செய்தால் ஹேமாவை இங்கே விடமாட்டேன் என்று அதிரடியாக கூறிவிட்டு செல்கிறார். மற்றொருபுறம் கண்டிப்பாக கண்ணம்மாவை விவாகரத்து செய்யப்போகிறேன். இந்த விஷயத்தில் கண்ணம்மாவிற்கு உதவி செய்தால் நான் உயிரோடு இருக்க மாட்டேன் என்று தாய் சௌந்தர்யாவிடம் சத்தியம் வாங்கிக்கொள்கிறார் பாரதி.

இப்படி பரபரப்பாக சீரியல் சென்றுக்கொண்டிருக்கையில் புதிய ப்ரோமோ ஒன்று வெளியாகியுள்ளது. அதில் வெண்பா சிறையிலிருந்து வெளியே வரமுடியாது என்றும் குற்றம் நிரூபணமாகும் வரை மருத்துவராக பணியாற்ற முடியாது, அதனால் ஜாமீனில் விடமாட்டார்கள் என்று அகில் கூற, வெண்பா நிரபராதி, எந்த தப்பும் செய்யவில்லை, நான் ஜாமீனில் எடுப்பேன் என்று பாரதி சொல்கிறார். இதற்கு பதிலடிக்கும் கொடுக்கும் சௌந்தர்யா, நீ வெண்பாவை ஜாமீனில் எடுத்தால், நான் கண்ணம்மாவுக்கு உதவி செய்வேன் என்று சொல்லும் பரபரப்பு ப்ரோமா வெளியாகியுள்ளது.

Related Posts

Leave a Comment