இந்திய அணியை பங்கமாக கிண்டல் செய்த வாசிம் ஜாபர்

by Column Editor

நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் விளையாடவுள்ள இந்திய அணியின் வீரர்கள் தேர்வு குறித்து முன்னாள் வீரர் வாசிம் ஜாஃபர் பகிர்ந்துள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகியுள்ளது.

டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி வெளியேற, நியூசிலாந்து அணி அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது. இந்த தொடரை தொடர்ந்து நியூசிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து மூன்று 20 ஓவர் போட்டி மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது.

இதற்காக ரோஹித் சர்மா தலைமையிலான 16 பேர் கொண்ட இந்திய அணி நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டது.இந்த அணியில் கே.எல். ராகுல் (துணை கேப்டன்), ருதுராஜ் கெய்க்வாட், ஷ்ரேயாஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ், ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்), இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), வெங்கடேஷ் ஐயர், யுஸ்வேந்திர சாஹல், ஆர்.அஷ்வின், அக்சர் படேல் , அவேஷ் கான், புவனேஷ்வர் குமார், தீபக் சாஹர், ஹர்ஷல் படேல், முகமது. சிராஜ் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

இதனிடையே இந்திய அணியின் முன்னாள் வீரர் வாசிம் ஜாஃபர் இந்திய அணி குறித்து பகிர்ந்துள்ள புகைப்படம் இணையத்தில் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. டி20 தொடருக்கான இந்திய அணியை குறிக்கும் விதமாக அவர் 5 சாவி புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளார்.

அதாவது நியூசிலாந்து அணிக்கு எதிராக அறிவிக்கப்பட்டுள்ள இந்திய அணியில் 5 தொடக்கவீரர்கள் இடம்பெற்றுள்ளனர். பிசிசிஐ அறிவித்துள்ள இந்திய அணியில் ரோஹித் சர்மா, கே.எல்.ராகுல், ருதுராஜ் கெய்க்வாட், இஷான் கிஷான், வெங்டேஷ் ஐயர் உள்ளிட்ட 5 பேர் உள்ளனர். இதனை குறிப்பிட்டுத்தான் வாசிம் ஜாஃபர் கிண்டல் செய்துள்ளதாக ரசிகர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Related Posts

Leave a Comment