இளம் மனைவி அடித்துக் கொலை – தென்னிலங்கையை உலுக்கிய கொடூரம்

by Column Editor

தென்னிலங்கையில் தனது மனைவியை அடித்து கொலை செய்த கணவர் பிள்ளையை கடத்தி சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மாத்தறை, மாலிம்பட பிரதேசத்தில் இந்த கொடூர சம்பவம் இடம்பெற்றுள்ளது.
உயிரிழந்தவர் மாலிம்பட வடக்கு பிரதேசத்தை சேர்ந்த ஆடை தொழிற்சாலையில் பணியாற்றும் ஒரு பிள்ளையின் தாய் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் 33 வயதுடைய ஹர்ஷா நிஷானி களுஆராச்சி என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

மொரவக்க பிரதேசத்தை சேர்ந்த 37 வயதுடைய கணவர் கடந்த 9 ஆம் திகதி இரவு தனது மனைவி மற்றும் மாமியாருடன் ஏற்படுத்திய வாய்த்தகராறு நீண்ட தூரம் சென்றுள்ளது. மாமியாரை கடுமையாக தாக்கிவிட்டு மனைவியை கொலை செய்துள்ளார் என ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.உயிரிழந்த பெண்ணின் கணவர் இந்த சம்பவத்தின் பின்னர் 2 வயதுடைய பிள்ளையுடன் வீட்டை விட்டு தப்பி சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.தாக்குதலில் படுகாயமடைந்த மனைவியின் தாயார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சந்தேக நபரை கைது செய்வதற்கு விசேட பொலிஸ் குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

Related Posts

Leave a Comment