மும்பையை பின்னுக்கு தள்ளி டெல்லி அணி முதலிடம்..!

by Lifestyle Editor

கடந்த சில நாட்களாக மகளிர் ஐபிஎல் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் நேற்று நடந்த போட்டியில் குஜராத் அணியை வீழ்த்தி டெல்லி அணி வெற்றி பெற்ற நிலையில் புள்ளி பட்டியலில் முதல் இடத்தை பெற்றுள்ளது.

நேற்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி 20 ஓவர்களில் எட்டு விக்கெட் இழப்பிற்கு 163 ரன்கள் எடுத்தது. இதனை அடுத்து 164 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய குஜராத் அணி 20 ஓவர்களில் எட்டு விக்கெட்டுக்களை இழந்து 138 ரன்கள் மட்டும் எடுத்ததால் 25 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி அணி வெற்றி பெற்றுள்ளது.

இதனை அடுத்து புள்ளி பட்டியலில் 6 புள்ளிகள் பெற்றுள்ள டெல்லி அணி முதலிடத்தை பெற்றுள்ளது. மும்பை அணியும் 6 புள்ளிகள் பெற்று இருந்தாலும் ரன்ரேட் குறைவானதால் 6 புள்ளிகள் இருந்தாலும் மும்பை அணி இரண்டாவது இடத்தை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts

Leave a Comment