முகப்பருவை விரட்ட எளிய முறையில் வீட்டு வைத்தியம்..

by Lifestyle Editor

1. நீங்கள் தினமும் ஒரு கரட் மற்றும் ஆரஞ்சு பழம் ஒன்றை சாப்பிட்டு வர வேண்டும். இது சருமத்தில் உள்ள அழுக்குகளை நீக்கி முகப்பரு வராமல் பாதுகாக்கும்.

கீரை, முட்டைகோஸ், முட்டை போன்ற உணவுகளை சாப்பிட வேண்டும் மற்றும் பப்பாசி, மாதுளை சாப்பட்டு இளநீர் குடிக்க வேண்டும். இதனால் உடல் சூடு தணிந்து முகப்பருவில் இருந்து சருமத்தை பாதுகாக்கும்.

2. எலுமிச்சை சாறுடன் தேன் அல்லது ரோஸ் வாட்டர் கலந்து முகத்தில் நேரடியாக தடவ வேண்டும். பின்னர் இதை அரை மணி நேரம் ஊறவைத்து நீரினால் கழுவிக்கொள்ள வேண்டும்.

இதே போல் தேனை முகத்தில் தடவி அரை மணிநேரம் வைத்து விட்டு கழுவினால் முகம் பளிச்சென்று வரும், முகப்பரு கிட்ட கூட வராது.

3.தினமும் காலையில் கரட் ஜீஸ் மற்றும் மாலையில் கொத்தமல்லி கசாயம் குடித்து வந்தால் உடல் சூட்டை தணித்து ரத்தத்தை சுத்தப்படுத்தி முகப்பருவை வர விடாது.

இதை தடவியதும் சோப் கொண்டு கழுவாமல் Face Wash கொண்டு கழுவினால் முகம் பளபளப்பாக வரும், இதை நீங்கள் தினமும் செய்யலாம்.

Related Posts

Leave a Comment