ஜெயிலுக்கு போனாலும் அடங்காத வெண்பா – கண்ணம்மாவுக்கு அதிர்ச்சி கொடுத்த பாரதி

by Column Editor

கண்ணம்மாவுக்கு விவாகரத்து நோட்டீஸ் அனுப்பி விட்டதாக ஜெயிலில் இருக்கும் வெண்பாவிடம் பாரதி கூறும் ப்ரோமோ வெளியாகியுள்ளது.

இரண்டாவது குழந்தை எங்கே இருக்கிறாள் என்று தேடி வந்த கண்ணம்மாவிடம், தன்னிடம்தான் குழந்தை இருப்பதாக வெண்பா ஏமாற்றி வந்தார். வெண்பாவின் திட்டத்தை தெரிந்துகொண்ட கண்ணம்மா, தன்னை ஏமாற்றிய வெண்பாவை பிளான் போட்டு சிக்க வைக்க முடிவு செய்கிறார். அதன்படி சட்டத்துக்கு எதிராக கருகலைப்பில் ஈடுப்பட்ட வெண்பாவை, கையும் களவுமாக போலீசாரிடம் சிக்க வைக்கிறார்.
தற்போது கையில் இருக்கும் வெண்பா, கண்ணம்மாவின் செயலால் மிகவும் கோபம் அடைந்திருக்கிறார். ஜெயிலில் இருந்து கொண்டே கண்ணம்மாவை பழிவாங்க பல சதித் திட்டங்களை தீட்டி வருகிறார். இதற்கிடையே கண்ணம்மாவுக்கு பாரதி விவாகரத்து நோட்டீசை பாரதி அனுப்பி வைக்கிறார். இதனால் கண்ணம்மா அதிர்ச்சியில் உறையும் காட்சிகள் தற்போது ஒளிப்பரப்பப்பட்டு வருகிறது.
இந்நிலையில் வெண்பாவை ஜெயிலுக்கு சென்று சந்திக்கும் பாரதியிடம், கண்ணம்மா தன்னை மாட்டிவிட்ட விஷயத்தை போட்டுக் கொடுக்கிறார். இதைக் கேட்ட பாரதி டென்ஷனாகி, ஒரு விஷயத்தை வெண்பாவிடம் சொல்கிறார். அது என்னவென்றால் இப்போதுதான் கண்ணம்மாவுக்கு விவாகரத்து நோட்டீஸ் அனுப்பி உள்ளேன் என்று பாரதி கூற, ஜெயிலில் இருக்கும் வெண்பா சந்தோஷத்தில் துள்ளிக் குதிக்கும் ப்ரோமோ தற்போது வெளியாகியுள்ளது.

Related Posts

Leave a Comment