256
விஜய் தொலைக்காட்சியில் ஓடும் அனைத்து சீரியல்களும் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. சமூக வலைதளங்களிலும் சீரியல் குறித்து ரசிகர்கள் அதிகம் பேசுகிறார்கள்.
ஒவ்வொரு சீரியலும் விறுவிறுப்பு குறையாமல் ஓடுகிறது, அண்மையில் பாக்கியலட்சுமி சீரியல் தொலைக்காட்சியில் நம்பர் 1 தொடர் என்ற இடத்தை பிடித்தது.
நாம் இதற்கு முன்பே அறிவித்திருந்தோம் பாண்டியன் ஸ்டோர்ஸ், தமிழும் சரஸ்வதியும் சீரியலின் மெகா சங்கமம் நடக்கிறது என்று, அதற்கு ஏற்றார் போல் இரு சீரியல் குழுவினரும் எடுத்த புகைப்படங்கள் வீடியோக்கள் வெளியாகியுள்ளது.
ஒரு வீடியோவில் நடிகை ரேகா மற்ற நடிகர்களுக்கு பானிபூரி கொடுக்கிறார், அந்த வீடியோவை ரசிகர்கள் அதிகம் லைக் செய்து வருகிறார்கள்.