265
சத்தீஸ்கர் மாநிலம் பீஜப்பூர் மாவட்டத்தில் சிஆர்பிஎப்பின் 168-வது பட்டாலியன் முகாம் உள்ளது.
இந்த நிலையில் முகாமில் பணியிலிருந்த சிஆர்பிஎப் கான்ஸ்டபிள் சனத்குமார் சனிக்கிழமை மாலை 5 மணியளவில் திடீரென தனது ஏகே 47 ரக துப்பாக்கியை எடுத்து சக வீரர்கள் மீது சரமாரியாக சுட்டார்.
இதையடுத்து அருகிலிருந்த சிஆர்பிஎப் வீரர்கள் சனத்குமாரை மடக்கிப் பிடித்து அவரிடமிருந்து துப்பாக்கியைப் பிடுங்கினர்.
இதில் 4 சிஆர்பிஎப் வீரர்கள் அதே இடத்திலேயே பலியாயினர். ஒரு வீரர் படுகாயமடைந்தார். இறந்த 4 பேருக்கும், சனத் குமாருக்கும் இடையே வாய்த் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த வாய் தகராறு முற்றியதில், அது கைகலப்பாகியுள்ளது.
இதில் ஆத்திரமடைந்த சனத்குமார் சக 4 வீரர்களையும் துப்பாக்கியால் சுட்டுள்ளார்.