ராஜூ, பிரியங்காவை குறிவைக்கும் ஹவுஸ்மேட்ஸ் – இந்த வார நாமினேஷன்

by Column Editor

பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி ஆரம்பித்து 35 நாட்கள் கடந்துள்ளது. நமீதா மாரிமுத்து, நாதியா சாங், அபிஷேக், சின்ன பொண்ணு ஆகியோர் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டனர். நேற்றைய எபிசோடில் சுருதி வெளியேற்றப்பட்டார். தற்போது வீட்டுக்குள் 13 போட்டியாளர்கள் இருக்கின்றனர். நாளுக்கு நாள் போட்டி கடுமையாகிக் கொண்டே இருக்கிறது. ஸ்ட்ராங்கான போட்டியாளர்களை குறிவைத்தே நாமினேஷன் நடக்கிறது. இந்த வாரமும் அப்படித் தான்.

தற்போது வெளியாகியிருக்கும் புரோமோவில் ஹவுஸ்மேட்ஸ் பலர் ராஜூ மற்றும் பிரியங்காவை நாமினேட் செய்வது போல காட்டப்பட்டுள்ளது. புரோமோவில் அபிநய், பவானி ரெட்டி, நிரூப், அக்ஷரா உள்ளிட்டோர் ராஜூவை நாமினேட் செய்கிறார்கள். இமான் அண்ணாச்சி, ராஜூ உள்ளிட்டோர் பிரியங்காவை நாமினேட் செய்கிறார்கள். பிக் பாஸ் வீட்டுக்குள் திறமையாக விளையாடும் போட்டியாளர்களே இந்த வார நாமினேஷனில் இடம்பெறுவார்கள் என்பதையே இந்த புரோமோ உணர்த்துகிறது.

பிக் பாஸ் வீட்டில் கலகலப்பாக இருக்கும் இரண்டு பேர் ராஜூவும் பிரியங்காவும் தான். எல்லா போட்டியாளர்களும் அவர்களுடன் சகஜமாக பழகுகிறார்கள். அவர்களை குறிவைத்து இந்த வார நாமினேஷன் நடப்பது பற்றி நெட்டிசன்கள் பல விதமாக கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

Related Posts

Leave a Comment