கேப்டனாக விராட்கோலிக்கு இன்றே கடைசி நாள்

by Column Editor

டி20 உலககோப்பை போட்டியில் இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேற முடியாமல் போனது. நேற்றைய போட்டியான ஆப்கானிஸ்தான் மற்றும் நியுசிலாந்து அணிகளுக்கு இடையிலான போட்டியில் நியூசிலாந்தின் வெற்றியால் பறிப்போனது.

இந்திய அணி இந்தியா நாக் அவுட் சுற்றுக்கு தகுதி பெறாமல் வெளியேறுவது இது 4 வது முறையாகும். இதற்கு முன் 2009, 2010, 2012 ஆகிய சீசன்களிலும் இந்தியா இதேபோல் அரையிறுதிக்கு முன்னேறாமல் ஏமாற்றத்துடன் வெளியேறியிருக்கிறது.

இதனிடையே, இன்று இந்திய அணி சம்பிரதாய ஆட்டத்தில் நமீபியாவை எதிர்கொள்கிறது. இந்த போட்டியின் வெற்றி தோல்வி எந்தவிதத்திலும் முடிவுகளைப் பாதிக்கப் போவதில்லை என்பதால் பெரிய எதிர்பார்ப்பில்லாத போட்டியாக நடக்க உள்ளது.

போட்டியில், இஷான்கிஷானுக்கு மீண்டும் ஆடும் லெவனில் வாய்ப்பு அளிக்கப்படலாம். இதுவரை களமிறங்காத ராகுல் சஹாருக்கு வாய்ப்பு அளிக்கப்படலாம்.

மேலும், ரிசர்வ்ட் வீரர்களாக உள்ள ஸ்ரேயாஸ் அய்யர், அக்‌ஷர் படேல் ஆகியோருக்கு வாய்ப்புகள் அளிக்கப்பட்டாலும் பெரிய ஆச்சரியம் ஏதுமில்லை.

இந்த உலக கோப்பையுடன் விராட் கோலி இந்திய 20 ஓவர் அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலகுகிறார். இதனால் அவர் 20 ஓவர் அணியின் கேப்டனாக விளையாடப்போகும் கடைசி போட்டி இதுவாகும்.

எனவே கோலி இன்றே கடைசி நாள் என்ற ஹேஷ்டேக்கையும் ட்விட்டரில் ட்ரெண்டாகி வருகின்றனர்.

Related Posts

Leave a Comment