பிக்பாஸில் முளைத்த புது காதல் ஜோடி இவர்களா?

by Column Editor

பிக்பாஸ் 5 நிகழ்ச்சி ஒரு மாதத்தை தாண்டி சென்று மிகவும் விறுவிறுப்பாக சென்றுக் கொண்டு இருக்கிறது.

பொதுவாக பிக்பாஸ் என்றாலே ஆரம்பித்த சில வாரங்களிலேயே ஏதாவது ஒரு காதல் கதை சென்றுவிடும் இந்த நிலையில் தற்போதைய பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஏதேனும் லவ் டிராக் செல்லும் என்று எதிர்பார்புகள் இருந்து வந்த நிலையில் தற்போது அக்ஷரா மற்றும் வருண் ஆகிய இருவருக்கும் ஏதோ கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆகி இருப்பது போல தான் தெரிகிறது.

இதனை உறுதிப்படுத்தும் கடந்த வெள்ளிக்கிழமை நடத்த டாஸ்க் ஒன்றில் ‘நீ கஷ்டப்படும் நேரத்தில் உன்னுடன் யார் இருப்பாங்க ‘ என்று அக்ஷராவிடம் கேட்கப்பட்ட போது கூட அக்ஷரா, வருண் தான் எனக்கு எப்போதும் ஆறுதலாக பேசுவார் என்று கூறி இருந்தார்.
அதே போல நேற்றைய நிகழ்ச்சியில் அக்ஷரா ஸ்கர்ட் ஒன்றை போட்டிருந்தார். அதை பார்த்த வருண் இந்த ட்ரஸ் நல்லாவே இல்லை போய் வேற டிரேஸ் மாத்து என்று சொன்னதும் ‘இது நல்லா தான இருக்கு’ என்று அக்ஷரா கூறினார்.

அதற்கு வருண் ‘நல்லா தான் இருக்கு எனக்கு புடிக்கல’ என்று சொன்னதும் அக்ஷரா பெட் ரூமிற்கு போய் வேறு உடையை எடுத்து மாத்திக்கொண்டார்.
தொடர்ந்து அடுத்த டாஸ்கில், அக்ஷரா நடக்கும் போது வருணையும், வருண் நடக்கும் போது அக்ஷராவையும் பிக்பாஸின் கேமரா காட்டியது.

இதனை வைத்து பார்க்கும்போது தற்போதைய பிக் பாஸ் நிகழ்ச்சியில் வருண் மற்றும் அக்ஷரா ஆகியோரிடையே காதல் மலர்ந்திருப்பது போல தெரிவதாக பரவலாக பேசப்பட்டு வருகிறது.

Related Posts

Leave a Comment