மாதங்கி முத்திரை

by Lifestyle Editor

செய்முறை

விரிப்பில் நிமிர்ந்து அமரவும். முதுகெலும்பு நேராக இருக்கட்டும். கண்களை மூடி இயல்பாக நடக்கும் மூச்சை பத்து வினாடிகள் கவனிக்கவும். எல்லா கை விரல்களையும் கோர்க்கவும். நடுவிரல் மட்டும் சேர்த்து நேராக படத்தில் உள்ளது போல் வைக்கவும். கையை வயிற்றுக்கு நேராக வைக்கவும். இரண்டு நிமிடங்கள் இருக்கவும். காலை, மதியம், மாலை இரண்டு நிமிடங்கள் சாப்பிடுமுன் பயிற்சி செய்யவும்.

ஒரு மணி நேரம் அல்லது இரண்டு மணி நேரத்திற்கு ஒரு முறை மலம் கழிக்கும் நிலை உள்ளது. ஒரு நாளில் பத்து முறை சிறிது சிறிதாக மலம் கழிக்கின்றனர். எப்பொழுதும் மலம் கழிக்க வேண்டும் என்ற உணர்வு இருந்து கொண்டேயிருக்கிறது. இது உடல் ரீதியாக இருக்கும் ஒரு குறைபாடுதான். ஜீரண மண்டலம் சரியாக இயங்குவதில்லை. மலக்குடலில் சக்தி ஓட்டம் சரியாக இல்லை.

உடலில் நிலம் மூலகம் நல்ல சக்தி ஓட்டம் பெறாமல் உள்ளது. இதனால் ஆசனவாய் தசைகள் வெளியே வரும் நிலை, மூலவியாதி, ஆசன வாய் தசைகளில் புண் ஏற்படுகின்றது. அடிக்கடி மலம் கழிப்பதால் ஆசன வாய் தசைகளின் உட்புறப் பகுதியில் புண் ஏற்படுகின்றது. இந்நிலையில் இருந்து முழுமையாக விடுதலை பெறுவதற்குரிய யோக முத்திரை இதுவாகும்.

Related Posts

Leave a Comment