வெறும் வயிற்றில் உடற்பயிற்சி செய்யலாமா?

by Lifestyle Editor

உடற் பயிற்சியை அதிகாலை செய்ய வேண்டும் என்று உடற்பயிற்சியாளர்கள் தெரிவித்து வரும் நிலையில் உடற்பயிற்சியை வெறும் வயிற்றில் செய்தால் ஏராளமான நன்மை உண்டு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெறும் வயிற்றில் உடற்பயிற்சி செய்யும் போது உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கும் என்றும் ஆனால் அதே நேரத்தில் கடுமையான உடற்பயிற்சி செய்வதற்கு அனுபவம் வாய்ந்தவர்களை அருகில் வைத்துக் கொண்டு செய்ய வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது

வெறும் வயிற்றில் உடற்பயிற்சி செய்தால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு குறைய வாய்ப்பு இருப்பதாகவும் எனவே வெறும் வயிற்றில் நடைப்பயிற்சி ஜாக்கிங் போன்ற எளிமையான உடற்பயிற்சியை மட்டும் செய்யலாம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது

உடற்பயிற்சி செய்வதற்கு முன் குறைந்த அளவு உணவு சாப்பிட வேண்டும் என்றும் குறிப்பாக வாழைப்பழம் ஆப்பிள் போன்றவற்றை தடுக்கலாம் என்றும் அல்லது எளிதில் ஜீரணமாகக்கூடிய உணவு சாப்பிடலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. உடற்பயிற்சி செய்து முடித்த பிறகு பழங்கள் தானியங்கள் முட்டை கோதுமை பால் தயிராகி விட்டு சாப்பிடலாம் என்றும் உடற்பயிற்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Related Posts

Leave a Comment