அனல்பறக்கும் பிக் பாஸ் புரோமோ! “இந்த வாரம் கண்டிப்பா எவிக்சன் இருக்கு”…

by Column Editor

பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி சுவாரஸ்யமாக சென்றுக் கொண்டிருக்கிறது. முதல் வாரம் நாமினேஷன் இல்லை. இரண்டாவது வாரம் நமீதா மாரிமுத்து பிக் பாஸ் வீட்டிலிருந்து திடீரென வெளியேறினார். அந்த வாரமே நாதியா சாங் எவிக்ட் செய்யப்பட்டார். அடுத்தடுத்த வாரங்களில் அபிஷேக் மற்றும் சின்ன பொண்ணு வெளியேற்றப்பட்ட நிலையில் தற்போது பிக் பாஸ் வீட்டுக்குள் 14 போட்டியாளர்கள் இருக்கின்றனர்.
இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் தீபாவளி பண்டிகை வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. ஆடல், பாடல் என போட்டியாளர்கள் கொண்டாடி மகிழ்ந்தனர். இம்முறை நாமினேஷனும் வித்தியாசமாக நடைபெற்றது. வழக்கமாக நடப்பதை போல் இல்லாமல், யாரை காப்பாற்ற நினைக்கிறீர்கள் என்று ஹவுஸ்மேட்ஸிடம் கேட்டார். ஹவுஸ்மேட்ஸ் காப்பாற்ற நினைக்காத நபர்கள் நாமினேட் செய்யப்படுவதாக அறிவித்தார். நாளை பிக் பாஸ் வீட்டில் எவிக்சன் நடக்கப் போகிறது.
தீபாவளி கொண்டாட்டங்கள் எல்லாம் நடைபெற்றிருப்பதால் பெரும்பாலும் இம்முறை எவிக்சன் இருக்காது என சமூக வலைத்தளங்களில் செய்திகள் உலா வருகின்றன. இந்த நிலையில், இந்த வாரம் கண்டிப்பாக எவிக்சன் நடைபெறுமென கமல்ஹாசன் பேசுவது போல புரோமோ வெளியாகியுள்ளது. அதில்”, பிக்பாஸ் கொளுத்திப் போட்ட பட்டாசு பயங்கரமா வெடிச்சிருக்கு. உள்ள விளையாடுறவங்க விளையாட்டில் வேகமும் வியர்வையும் கூடி இருக்கிறது. இங்கே வெளியே சிலர் இது தீபாவளி நேரம் சில சலுகைகள் இருக்கும் எவிக்ஷன் இருக்காது என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஏன் இருக்காது கண்டிப்பா இருக்கும். பண்டிகைக்கு சலுகை கொடுக்கலாமே… தவிர செலவே இல்லாமல் இருக்குமா?” என்று பேசுகிறார்.

Related Posts

Leave a Comment