341
பிக்பாஸ் வீட்டில் நேற்றைய தினம் தீபாவளி கொண்டாட்டத்திற்கு பின்பு இன்றைய ப்ரொமோ காட்சி வெளியாகியுள்ளது.
இதில் செண்பகமே… செண்பகமே… என்ற டாஸ்க் கொடுக்கப்பட்டு போட்டியாளர்கள் இரு அணிகளாக பிரிந்துள்ளனர்.
பிக்பாஸ் வீட்டிற்குள் ஒரு பொம்மை கறவை மாடு வைக்கப்பட்டுள்ளது. குறித்த டாஸ்கில் வெற்றி பெற இறுதியில் பசுமாட்டையே கீழே தள்ளிவிட்ட கொடுமை பார்வையாளர்களை சிரிக்க வைத்துள்ளது.
இரண்டாவது ப்ரொமோ காட்சியில் ஒட்டுமொத்த போட்டியாளர்களின் சுயரூபமும் வெளியாகியுள்ளது. வெறும் ஒரு மாதத்தில் போட்டியாளர்கள் இவ்வளவு வெறித்தனமாக இருக்கின்றனரே என்ற எண்ணம் தான் பார்வையாளர்களுக்கு தோன்றியுள்ளது.