237
பாரதி கண்ணம்மா சீரியலில் இருந்து ரோஷினி வெளியேறுகிறார் என்று வந்த செய்தி ரசிகர்களுக்கு கடும் சோகத்தை கொடுத்துள்ளது.
அவர் ஏன் விலக வேண்டும், கண்ணம்மாவாக அவரை தாண்டி யாரையும் நினைக்க முடியாது என ரசிகர்கள் சமூக வலைதளங்களில் புலம்பி வருகிறார்கள். கடந்த சில நாட்களாக சீரியலிலும் எந்த ஒரு சுவாரஸ்ய காட்சியும் இல்லை.
இந்த நேரத்தில் தான் பாரதி கண்ணம்மா சீரியலின் அதிரடி புரொமோ வந்துள்ளது.
அதில் வெண்பா சட்டத்துக்கு எதிராக கரு கலைப்பு செய்து வருவதாக போலீசார் அவரை கைது செய்ய அதைகேள்விப்பட்ட பாரதி அதிர்ச்சியாகிறார்.
பின்பு தான் தெரிகிறது வெண்பாவுக்கு இப்படி ஒரு செக் வைத்ததே கண்ணம்மா என்று, அந்த புரொமோ ரசிகர்களிடம் பரபரப்பாகி வருகிறது.