மொத்த வறுமையையும் போக்க நான் ரெடி!நம்பர் ஒன் கோடீஸ்வரர் வைத்தகண்டிசன்

by Column Editor

உலக பணக்காரர்களின் வருமானத்தில் வெறும் 2 சதவீதம் மட்டுமே உலகப் பசியைத் தீர்க்க உதவும் என்று ஐக்கிய நாடுகள் மன்றம் நிரூபித்தால் டெஸ்லா பங்குகளை விற்கத் தயாராக இருப்பதாக எலான் மஸ்க் சவால் விடுத்துள்ளார்.

உலகின் மிகப்பெரிய செல்வந்தர்களின் மொத்த வருவாயில் 2 சதவீதமான 6 பில்லியன் டொலர் தொகையில் உலக மக்களின் பசியை போக்குவதாக நிரூபித்தால், அதற்காக டெஸ்லா பங்குகளை விற்க தாம் தயார் என ஞாயிறன்று எலான் மஸ்க் தெரிவித்திருந்தார்.

ஆனால் குறித்த தொகையை ஐ.நா. மன்றத்தின் WFP எவ்வாறு செலவிடுகிறது என்பதை பொதுமக்களுக்கு வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும் எனவும் எலான் மஸ்க் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக ஐ.நா. மன்றத்தின் WFP அமைப்பின் நிர்வாக இயக்குனர் David Beasle தெரிவிக்கையில், உலக மக்களின் பசியை போக்க பெரும் செல்வந்தர்கள் உதவ முன்வர வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்திருந்தார்.

42 மில்லியன் மக்கள் பசியால் மரணமடையும் நிலையில் தள்ளப்பட்டுள்ளனர். இதற்கு 6 பில்லியன் டொலர் தேவைப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த நிலையிலேயே ஐ.நா. மன்றத்தின் WFP அமைப்பிற்கு வெளிப்படைத் தன்மை தேவை எனவும்,

அதற்காக டெஸ்லா பங்குகளை தாம் விற்க தயாராக இருப்பதாகவும் எலான் மஸ்க் குறிப்பிட்டுள்ளார். எலான் மஸ்கின் மொத்த சொத்து மதிப்பு 302 பில்லியன் டொலர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts

Leave a Comment