இலங்கை தமிழர்களின் நகைக்கடன்களும் தள்ளுபடி

by Column Editor

கூட்டுறவு நிறுவனங்களில் ஐந்து பவுனுக்கு உட்பட்டு பெறப்பட்ட நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் அறிவித்திருந்தார்.

இது தொடர்பான அரசாணையை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

இந்த நிலையில் தற்போது மறுவாழ்வு முகாம்களில் வாழும் இலங்கை தமிழர்களின் நகைக்கடன்களும் அரசின் நிபந்தனைக்கு உட்பட்டு இருந்தால் தள்ளுபடி செய்யப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

குடும்ப அட்டை, ஆதார் விவரங்களை சரியாக அளிப்பவர்களுக்கு மட்டுமே நகைக்கடன் தள்ளுபடி திட்டத்தின் கீழ் பயன் பெற தகுதியானவர்கள் ஆவர் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

“கூட்டுறவு நிறுவனங்களில் குடும்ப அட்டையின்படி , ஒரு குடும்பத்தினர் 31.03.21 வரை ஐந்து பவனுக்கு உட்பட்டு நங்க நகைகளை அடமானம் வைத்து நகைக்கடன் பெற்றதில் ஒரு சில கடன் தாரர்கள் தங்களது கடன் தொகையை பகுதியாகவோ அல்லது முழுமையாகவோ செலுத்தியது நீங்கலாக, நிலுவையில் இருந்த தொகை ரூ.1,114.64 கோடி என்றும் அதற்கு பிறகு 1.04.21 முதல் 30.09.21 வரை பொது நகைக் கடன்களை பகுதியாகவோ அல்லது முழுவதுமாக திரும்பச் செலுத்தியது மற்றும் தகுதி பெறாத நேர்வுகளை நீக்கிய பின்னர் அசல், வட்டி , அபராத வட்டி மற்றும் இதர செலவுகள் உள்ளிட்டு நிலுவையாக ரூ.6000 கோடி உள்ளது என்று முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

எனவே, முதலமைச்சர் அறிவிப்பினை நிறைவேற்றும் பொருட்டு, கூட்டுறவு நிறுவனங்களில் குடும்ப அட்டையின்படி ஒரு குடும்பத்தில் 31.03.21 வரை 5 பவுனுக்கு உட்பட்டு பொது நகைக்கடன் பெற்று அதில் சில கடன் தாரர்கள் நாளது திகதி வரை தங்களது நிலுவை தொகையினை பகுதியாக செலுத்தியது நீங்கலாகவும், தகுதி பெறாத நேர்வுகளை நீக்கிய பின்னரும் இந்த அரசானை பிறப்பிக்கப்படும் நாள்வரை நிலுவையில் உள்ள ரூ.6,000 கோடி நகைக் கடன்களை தள்ளுபடி செய்து அரசு ஆணை இடுகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தள்ளுபடியில் உள்ள அசல் தொகை மற்றும் 1.04.21ஆம் நாள் முதல் அரசாணை பிறப்பிக்கப்படும் நாள் வரை அதற்குரிய வட்டியினை அரசு ஏற்றுக்கொண்டு கூட்டுறவு நிறுவனங்களுக்கு தள்ளுபடி தொகையினை அரசு வழங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts

Leave a Comment