சிபியின் தலைவர் பதவியை தட்டிப்பறித்த வருண்

by Column Editor

நாணயத்தை பயன்படுத்தி பிக் பாஸ் வீட்டில், இந்தவார தலைவரானார் வருண் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

திங்கட் கிழமை என்பதால் தலைவர் பதவிக்கான போட்டி நடைபெற்றது.

இதில், ராஜூ மற்றும் சிபி போட்டியிட்டனர். டாஸ்கின் பெயர், கப்பு முக்கியம் பிகிலு, இந்த போட்டி ஆக்டிவிட்டி ஏரியாவில் நடத்தப்பட்டது. போட்டியாளர்களுக்காக ஒரு சேற்றுக்குழி இருக்கும், ஒரு ஜிம் பந்து சேற்றின் நடுவே வைக்கப்பட்டு இருந்தது.

இரண்டு கோள் போஸ்டுகள் மண் களவைக்கு வெளியே எதிர் எதிராக வைக்கப்பட்டு இருந்தன.

இதில் போட்டியாளர்கள் பந்தை கால்களை பயன்படுத்தி உதைத்து கோள் போஸ்டுக்கு அடிக்க வேண்டும். பஸ்சர் முடிவதற்குள் கோள் போஸ்டுக்குள் அதிகமுறை யார் பந்தை அடித்தார்களோ அவர்களே இந்த வாரத்தின் தலைவராக தேர்வு செய்யப்படுவார் என்று அறிவுறுத்தப்பட்டு இருந்தது.

இதில் 3 முறை பந்தை கோள் போஸ்டில் அடித்து சிபி இந்த வாரத்தின் தலைவராக தேர்வு செய்யப்படடார்.

இதையடுத்து, நாணயத்தை வைத்திருக்கும், இசைவாணி,பவானி, வருண், ஸ்ருதி, நிரூப்பை அழைத்த பிக் பாஸ் இந்த நாணயத்தை பயன்படுத்தி இந்த வாரத்திற்கான தலைவரை மாற்ற விரும்புகிறீர்களா என்று கேட்டார். இதையடுத்து, வருண் தன்னிடம் உள்ள நாணயத்தை பயன்படுத்தி சிபிக்கு பதிலாக நான் தலைவராக மாறி இருப்பதாக கூறினார்.

இந்த வாரம் முழுவதும் சுத்தம் செய்ய வேண்டும் என்று அறிவித்த பிக் பாஸ், இந்த வாரத்தின் தலைவராக வருண் தேர்வு செய்யப்பட்டதாக அறிவித்தார். இதையடுத்து, வருணை மற்ற போட்டியாளர்கள் வாழ்த்தினர்.

Related Posts

Leave a Comment