5 கோடி பணத்துடன் ஸ்கூலை வாங்க வந்த செளந்தரபாண்டி… ஒரு நிமிடத்தால் ஷண்முகத்துக்கு அடித்த லக்!

by Lifestyle Editor

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா. இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் ரவுடிகள் உண்டியலை தூக்கி செல்ல வைகுண்டம் சத்தம் போட்ட நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. அதாவது, வைகுண்டம் சத்தம் போட்டதை கேட்டு ஷண்முகம் வெளியே ஓடி வர உண்டியலை தூக்கி செல்வதை பார்த்து விடுகிறான்.

ரவுடிகளிடம் சண்டை போட்டு கொண்டிருக்க, அவனது தங்கைகளும் பரணியும் சாதுர்யமாக செயல்பட்டு ரவுடிகள் மீது மிளகாய் பொடியை வீசி உண்டியலை காப்பாற்றுகின்றனர். இதனை தொடர்ந்து ஷண்முகம் இரவெல்லாம் தூங்காமல் உண்டியலுக்கு காவலாக இருந்து மறுநாள் காலையில் ஸ்கூலை வாங்க தயாராகி சாமி கும்பிட்டு கொண்டிருக்க, உடன்குடி வேகவேகமாக ஓடி வருகிறான். ஷண்முகம் அந்த சௌந்தரபாண்டி 5 கோடி ரூபாய் பணத்துடன் நமக்கு முன்னாடியே ரெஜிஸ்டர் ஆபிஸ் போய்ட்டான் என்று விஷயத்தை தெரியப்படுத்துகிறான்.

இதனால் அதிர்ச்சிக்குள்ளாகும் ஷண்முகம் குடும்பம் உண்டியலை எடுத்து கொண்டு வேகவேகமாக கிளம்பி வருகின்றனர், இங்கே சௌந்தரபாண்டி கையெழுத்து போட போக சனியன் நல்ல நேரம் வர இன்னும் 3 நிமிஷம் இருக்கு காத்திருக்க வைக்கிறான். 3 நிமிடம் ரெண்டு நிமிடமாகிறது, ரெண்டு நிமிடம் ஒரு நிமிடமாகி சௌந்தரபாண்டி கையெழுத்து போட தயாராக உண்டியலுடன் என்ட்ரி கொடுக்கிறான் ஷண்முகம். இதனால் சௌந்தரபாண்டி ஷாக் ஆகிறார்.

அதன் பிறகு ஷண்முகம் இந்த ஸ்கூலை வாங்குவதற்காக தன்னுடைய தங்கையின் நகை, மக்களின் நகை, பணம் என எல்லாரும் சேர்ந்து பணத்தை திரட்டிய கதையை சொல்கிறான்.

ஸ்கூல் ஓனர் சௌந்தரண்டியும் உனக்காக தானே இந்த ஸ்கூலை வாங்கிறாரு, அதுல உனக்கு என்ன பிரச்சனை என்று கேட்க அவர் இந்த ஸ்கூலை வாங்கி பாராக மாற்ற பிளான் போடுகிறார் என்ற விஷயத்தை உடைக்க, ஓனர் அதிர்ந்து போகிறார், சிக்கி கொண்ட சௌந்தரபாண்டி பதில் சொல்ல முடியாமல் தவிக்கிறார்.

இந்த நேரத்தில் பரணி நான் இந்த ஸ்கூலில் படிச்சு தான் டாக்டர் ஆகி இருக்கேன், இந்த மாவட்டத்தோட கலெக்டர் இந்த ஸ்கூலில் படிச்சி ஜெயித்தவர் தான் என்று ஸ்கூல் பற்றிய அருமை பெருமைகளை எடுத்து சொல்கிறாள். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய அண்ணா சீரியலை மிஸ் பண்ணாம பாருங்க.

Related Posts

Leave a Comment