அட்சய திருதியை ஏன் கொண்டாடுகிறோம்? தங்கம் வாங்க உகந்த நேரம் என்ன?

by Lifestyle Editor

அட்சய திருதியை என்றால்‌ வளர்க என்று பொருள்‌. அட்சய திருதியை நாளில்‌ செய்யும்‌ செயல்‌ மேன்மேலும்‌ வளரும்‌ என்பது நம்பிக்கை. அட்சய திருதியை நாளில்‌ நாம்‌ வாங்கும்‌ பொருட்கள்‌ மேன்மேலும்‌ வளரும்‌. அன்றைய தினம்‌ கல்‌ உப்பு. மஞ்சள்‌ வாங்கினாலும்‌ தங்கம்‌ வாங்குவதற்குரிய பலன்கள்‌ கிடைக்கும்‌. நம்முடைய வீட்டில்‌ செல்வம்‌ பெருகும்‌.

சித்திரை மாதத்தின் சுக்ல பட்சம் 14 வது நாளில் அட்சய திரிதியை கொண்டாடப்படுகிறது. அட்சயம் என்றால் அள்ள அள்ள குறையாத, என்று பொருள். 15 திதிகளில் மூன்றாவதாக வரும் திதி திரிதியை அட்சய திருதி. 3-ஆம்‌ எண்ணுக்கு அதிபதி குரு. இந்த குரு உலோகத்தில்‌ தங்கத்தை பிரதிபலிக்கிறார்‌. எனவே குருவுக்கு பொன்னன்‌ என்ற பெயரும்‌ உண்டு. இதனால்‌ தான்‌ அட்சய திருதியை நாளில்‌ பொன்‌ வாங்குவது சிறப்பாகிறது.

சமஸ்கிருதத்தில் அக்‌ஷயா என்ற வார்த்தைக்கு ஒரு போதும் குறையாது என்று பொருள். அதனால் இந்த நாள் முடிவில்லாத செழிப்பை குறிக்கிறது. புனித நூல்களின் படி 4 யுகங்களில் ஒன்றான திரேதா யுகம் தொடக்கத்தை இந்த நாள் குறிப்பதாக சொல்லப்படுகிறாது.

விஷ்ணுவின் 6ஆம் அவதாரமான பரசுராமர் அவதரித்த நாளும் இதுவே என்றும் கருதப்படுகிறது. மேலும், இந்தியாவின் புனித நதியான கங்கை வானத்திலிருந்து பூமிக்கு வந்ததாகவும் புராணங்கள் நமக்கு கூறுகின்றன.

அட்சய திருதியை 2024:

மே 10ம் தேதி காலை 4.17 மணிக்கு திரிதியை திதி தொடங்குகிறது. அதேசமயம் மே 11ஆம் தேதி மதியம் 2:50 மணிக்கு முடிவடையும். எந்த ஆண்டும் இல்லாத வகையில் இந்த வருடம் வெள்ளிக்கிழமையில் அட்சய திருதியை வருவதால் மிகவும் மங்களகரமானதாக கருதப்படுகிறது.

நகை வாங்க உகந்த நேரம்:

மே 10 மற்றும் 11 ஆகிய இரு தினமும் காலை 5:33 முதல் மதியம் 12:18 வரை தங்கம், வெள்ளி போன்றவற்றை வாங்குவது ஆண்டு முழுவதும் லட்சுமி தேவியின் ஆசீர்வாதத்தைத் தரும் நேரமாகும்.

Related Posts

Leave a Comment