திருப்பதியில் தம்பதியினர் ஒன்றாக கலந்து கொள்ளும் சிறப்பு ஹோம பூஜைக்கான டிக்கெட்வெளியீடு..!!!

by Lifestyle Editor

இந்த சிறப்பு ஹோமத்தில் கணவன் மனைவி தம்பதியாக கலந்து கொண்டால் நன்மை பெறலாம் என்பது ஐதீகம்.

உலகப் புகழ்பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான மக்கள் குவிந்து வருகின்றனர். கூட்டநெரிசலை குறைக்கும் விதமாகவும், பக்தர்கள் வசதிக்காகவும் சாமி தரிசனம் செய்ய ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு வசதி வழங்கப்படுகிறது.

அந்த வகையில் தம்பதியினர் ஒன்றாக கலந்து கொள்ளும் சிறப்பு ஹோம பூஜைக்கான ஆன்லைன் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது.

திருப்பதி ஏழுமலையான் கோயில் மலை அடிவாரத்தில் ஹோ மந்திர யாகசாலை கட்டிடம் உள்ளது. இங்கு வரும் 23ஆம் தேதி காலை 9 மணிக்கு ஸ்ரீனிவாச திவ்ய அனுக்கிரக சிறப்பு ஹோமம் தொடங்கி நடைபெறவுள்ளது.

இந்த சிறப்பு ஹோமத்தில் கணவன் மனைவி தம்பதியாக கலந்து கொண்டால் நன்மை பெறலாம் என ஐதீகம். இதில் கலந்து கொள்ள விரும்பும் பக்தர்கள் தலா ஆயிரம் ரூபாய் செலுத்தி டிக்கெட்டுகளை நேரடியாகவும், ஆன்லைன் மூலமாகவும் பெற்று கொள்ளலாம்.

திருப்பதி கோயிலில் இந்த ஆண்டு 2 பிரம்மோற்சவ விழாக்கள் நடைபெற்றன. இதனை தொடர்ந்து தேவஸ்தானத்தில் பணிபுரியும் நிரந்தர ஊழியர்களுக்கு தலா ரூ.14,000 ஒப்பந்த மற்றும் பிற வகையான ஊழியர்களுக்கு ரூ.6,850 பிரம்மோற்சவ சன்மானமாக வழங்கப்படுகிறது. இதற்காக ரூ.20 கோடி நிதியை தேவஸ்தானம் ஒதுக்கீடு செய்துள்ளது.

Related Posts

Leave a Comment