கோல்மால் வேலை செய்து ஸ்கூலை கைப்பற்றும் செளந்தரபாண்டி… என்ன செய்யப்போகிறார் ஷண்முகம்?

by Lifestyle Editor

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 8.30 மணிக்கு ஒளிப்பரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா. இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் ஷண்முகம் தனக்காக வீட்டை அடமானம் வைத்த விஷயம் பரணிக்கு தெரிய வந்த நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

அதாவது, பரணி சிவபாலனிடம் ஷண்முகம் எனக்காக என்னெல்லாம் செய்திருக்கான் என்று எமோஷனாக பேசி வருகிறாள், எதிரே ஷண்முகம் வர அவனை பளாரென்று அறைய, ஷண்முகம் எதுக்கு இப்போ அடிச்ச என்று கேட்க, எனக்காக வீட்டை அடமானம் வச்சியா? என்னை உனக்கு இவ்வளவு பிடிக்குமா என்று பேசுகிறாள்.

அடுத்து சௌந்தரபாண்டி ஸ்கூல் ஓனருக்கு போன் போட்டு நானும் சண்முகமும் ஒன்னு தான். நானும் அந்த ஸ்கூலை எடுத்து நடத்தணும்னு நினைக்கிறேன். உங்களுக்கு 5 கோடி கொடுத்துடுறேன் எனக்கே கொடுத்துடுங்க என்று சொல்ல, ஓனர் ஸ்கூலை யார் எடுத்து நடத்தினாலும் எனக்கு சந்தோசம் தான், உங்களுக்கே கொடுத்து விடுகிறேன் என்று வாக்கு கொடுக்கிறார்.

போனை வைத்த சௌந்தரபாண்டி ஸ்கூலை வாங்கியதும், அதை இடித்து தள்ளிட்டு பிளாட் போட்டு விற்றால் பெரிய லாபம் வரும் என்று கணக்கு போடுகிறார், இங்கே ஷண்முகம் பணத்துக்கு என்ன செய்வது என்று யோசித்து கொண்டிருக்க, கனி தன்னுடைய உண்டியல் பணத்தையும் கொண்டு வந்து கொடுக்கிறாள். தங்கச்சியின் பாசத்தை பார்த்த ஷண்முகம் சிலிர்த்து போகிறான்.

நைட்டெல்லாம் பரணி தூங்காமல் அழுது கொண்டே இருக்க, தூக்கத்தில் இருந்து எழுந்து கொள்ளும் ஷண்முகம் நீ இன்னும் தூங்கலையா என்று கேட்க, பரணி அவன் தனக்காக செய்த விஷயங்களை நினைத்து கண்ணீருடன் பேசி தனது மனதுக்குள் இருக்கும் காதலை சொல்கிறாள். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய அண்ணா சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் மிஸ் பண்ணாம பாருங்க.

Related Posts

Leave a Comment