முதல் காதலியை தேட தொடங்கும் மனோஜ், இடையில் முத்து..

by Lifestyle Editor

சிறகடிக்க ஆசை, மிகவும் கலகலப்பாக, விறுவிறுப்பாக செல்லும் ஒரு சீரியல்.

அதிலும் வசனங்கள் மூலம் மக்களை மிகவும் இந்த தொடர் குழுவினர் கவர்ந்துவிட்டார்கள். கடைசி எபிசோடில் மீனாவின் பூக்கடையை, விஜயா-ரோஹினி சூழ்ச்சியால் காலி செய்ய முத்து தனது மனைவிக்காக நடமாடும் பூக்கடையை ஏற்பாடு செய்துள்ளார்.

அந்த காட்சிகள் இந்த வாரம் வர இருக்கிறது, விஜயா என்ன ரியாக்ஷன் கொடுக்கப்போகிறார் என்பதை காண ரசிகர்கள் ஆவலாக உள்ளனர்.

இந்த நிலையில் மனோஜ் ரோஹினியிடம் எல்லோரும் முன்னேறுகிறார்கள், பணம் இல்லை என வருத்தப்படுகிறார்.

அதற்கு ரோஹினி உன்னை ஏமாற்றிய பெண்ணை கண்டுபிடித்து பணம் வாங்க வேண்டும் என கூறுகிறார். அவள் எங்கே இங்கே இருக்கிறாள், கனடா சென்றுவிட்டாள் என மனோஜ் கூற அப்படியே ஜீவாவை, முத்துவின் காரில் பயணம் செய்யும் காட்சியை காண்பிக்கிறார்கள்.

முத்துவை காண்பிப்பதால் மனோஜ் காதலியை கண்டுபிடிக்க அவர் ஏதாவது வழியில் உதவுவாரா அல்லது ஒரு காட்சிக்காக முத்து காரில் பயணம் செய்ய வைத்துள்ளார்களா, அடுத்து கதையில் என்ன நடக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்து காண்போம்.

Related Posts

Leave a Comment