கோடையில் பாலியல் ஆர்வம் அதிகரிக்க காரணங்கள்..

by Lifestyle Editor

கோடைக்காலம் மனநிலை, பாலியல் ஆசை போன்றவற்றுடன் வலுவான தொடர்பை கொண்டுள்ளது. சோர்வு அல்லது மனச்சோர்வு பாலியல் ஆசையின் பற்றாக்குறையை உண்டு செய்கின்றன. அதே நேரம் சூரிய ஒளி விழிப்புணர்வையும் ஆற்றலையும் பாதிப்பதன் மூலம் பாலியல் செயல்பாடுகளை அதிகரிக்க செய்யலாம். இன்னும் சற்றும் விரிவாக காரணங்களை அலசலாம்.

சூரிய ஒளி வெப்பம் பாலியல் உணர்வை ஊக்குவிக்கலாம்​ :

கோடைக்காலத்தில் சூரிய ஒளியின் வெளிப்பாடு செரோடோனின் அதிகரிப்புடன் தொடர்புடையது என்கிறார்கள் நிபுணர்கள். இது நல்ல ஹார்மோன்,. இது சிறந்த மனநிலையை உண்டு செய்கிறது. வெப்பமான வானிலை இரத்த ஓட்டத்தில் அதிகரிப்பு உண்டு செய்யலாம். இவையும் பாலியல் தூண்டுதலை உண்டு செய்யும். மேலும் இது அதிக எண்டோர்பின்க்ளை உற்பத்தி செய்யும். இவையும் லிபிடோவை அதிகரிக்கலாம்.

​வைட்டமின் டி அதிகம் கிடைப்பதால் பாலியல் ஆர்வம் அதிகரிக்கும்​

சூரிய ஒளியின் அதிகரிப்பு உடலில் வைட்டமின் டி அளவை அதிகரிக்கலாம். இது ஆண்கள் மற்றும் பெண்களில் டெஸ்டோஸ்டிரோன் அளவை அதிகரிக்கலாம். டெஸ்டோஸ்டிரோன் என்பது பாலியல் வாழ்க்கையுடன் நெருக்கமாக தொடர்பு கொண்ட ஹார்மோன் ஆகும். வைட்டமின் டி 20 முதல் 40 வயதுடைய பெண்களின் மனநிலையை மேம்படுத்துகிறது என்கிறது ஆய்வு ஒன்று. குறிப்பாக வைட்டமின் டி குறைபாடு உள்ளவர்களுக்கு என்பது குறிப்பிடத்தக்கது.

அதிக வெப்பநிலை வியர்வை பாலியல் செயல்பாட்டை மேம்படுத்தும்​

உடற்பயிற்சியால் வரும் வியர்வை கூட பாலியல் ஆர்வத்தை மேம்படுத்தும். சில ஆய்வுகளில் ஆண்ட்ரோஸ்டேடியனோன் என்னும் (ஆண் வியர்வையில் இருக்கும் பெரோமோன்) பெண்களின் மனநிலையையும் கவனத்தையும் மேம்படுத்துவதாக கூறுகிறது. இது பெண்களின் பாலுணர்வுக்கு முக்கியமானதாக சொல்லப்படுகிறது. மேலும் இந்த பெரோமோன் பாலியல் வாழ்க்கை கொல்லும் மன அழுத்த ஹார்மோனான கார்டிசோலை குறைக்கிறது. மேலும் ஈர்ப்பை அதிகரிக்கிறது. இதுவும் பாலியல் ஆர்வத்தை மேம்படுத்தும்.

சருமத்தை வெளிப்படுத்தும் ஆடைகள் பாலியல் ஆர்வத்தை மேம்படுத்தலாம்​

உண்மையில் சருமத்தை வெளிப்படுத்தும் ஆடைகள் எப்போதும் கவர்ச்சியை ஏற்படுத்தும். தோலை வெளிப்படுத்தும் வகையில் உள்ளாடைகள் மென்மையாக அணிவது பெரிய பாலியலில் பெரிய திருப்பமாக இருக்கும். கோடையில் சருமம் ஒன்றுடன் ஒன்று தொடர்பு கொள்வதற்கான வாய்ப்புகள் அதிகம் என்பதாலும் பாலியல் ஆர்வம் இயல்பாகவே அதிகரிக்க செய்யலாம். துணையின் சருமத்துடன் தொடர்பு கொள்ளும் போது உடல் ஆக்ஸிடாசினை வெளியிட செய்கிறது. இது நல்ல உணர்வு ஹார்மோன். இது காதல் ஹார்மோன் என்றும் அழைக்கப்படுகிறது.

கோடையில் தூக்கமின்மை பாலியல் ஆர்வத்தை மேம்படுத்தலாம்​

அதிக வெப்பம் இருக்கும் போது தூக்கம் வராமல் இருக்கும். சூரியனின் அதிக நேரம் செலவிடும் போது அது உடலில் மெலடோனின் உற்பத்தியை தடுக்கிறது. இந்த மெலடோனின் என்பது தூக்கத்துக்கு உதவும் ஹார்மோன். இந்த குறைவான தூக்கம் துணியின் மீதான ஆர்வத்தை அதிகரித்து கவர்ச்சியை வெளிப்படுத்துகிறது.

Related Posts

Leave a Comment