காதலியால் தாக்கப்படும் சித்தார்த்! தோல்வியில் குணசேகரன்..

by Lifestyle Editor

பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் சீரியலில் பல திருப்பங்கள் அரங்கேறி வருகின்றது.

பெண்களின் அடிமைதனத்தை மையமாக எடுக்கப்பட்டுள்ள இந்த சீரியல் பெண்கள் மட்டுமின்றி ஆண்களும் அவதானித்து வருகின்றனர்.

குறித்த சீரியல் பரபரப்பாக சென்று கொண்டிருந்த நிலையில், கடந்த சில மாதத்திற்கு முன்பு சீரியலின் நாயகனான குணசேகரன் திடீர் மாரடைப்பினால் உயிரிழந்த அவருக்கு பதில் நடிகர் வேல ராமமூர்த்தி நடித்து வருகின்றார்.

நீண்ட நாட்களாக சுவாரசியமில்லாமல் சென்ற சீரியலை தற்போது கதிர் டிஆர்பி- எகிற வைத்துள்ளார். கதிர் மட்டுமின்றி ஞானம் இருவரும் அண்ணனுக்கு எதிராக மாறியுள்ளனர்.

ஜீவானந்தத்தின் நிலை என்ன என்பதும் தெரியாமல் உள்ளதால் அவரது மகள் வெண்பாவை ஈஸ்வரி வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார்.

தர்ஷினி குணசேகரன் பக்கம் சாய்ந்துள்ள நிலையில், உமையாளின் மகனை மீண்டும் கதிர் கடத்தியுள்ளார். ஜனனியின் தங்கை அவர் மீது ஆவேசம் கொண்டுள்ளார்.

மொத்த குழுவினரும் குணசேகரனை தோற்கடிக்க படுவேகமாக வேலை பார்த்து வருகின்றனர்.

Related Posts

Leave a Comment