குறைந்தது தங்கம் விலை.. எவ்வளவு தெரியுமா?

by Lifestyle Editor

வரலாறு காணாத உச்சத்தை எட்டும் தங்கம் விலை நேற்று ஏப்ரல் 14ஆம் தேதி சவரனுக்கு 600 உயர்ந்த நிலையில் இன்று அதிரடியாக குறைந்துள்ளது.

அதன்படி இன்று ஏப்ரல் 15ஆம் தேதி 22 காரட் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.65 குறைந்து ஒரு கிராம் ரூ6,790க்கும், சவரனுக்கு ரூ.520 குறைந்து ஒரு சவரன் ரூ.54,320க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இதே போன்று 18 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.53 குறைந்து ஒரு கிராம் ரூ.5,562க்கும் சவரனுக்கு ரூ.424 குறைந்து ஒரு சவரன் ரூ.44,496க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை மட்டும் கிராமுக்கு 50 காசுகள் உயர்ந்து ஒரு கிராம் ரூ.89.50க்கும் , ஒரு கிலோ வெள்ளி ரூ.89,500-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Related Posts

Leave a Comment