டான்ஸ் ஜோடி டான்ஸ் பைனல்.. டைட்டில் வின்னர் யார் தெரியுமா..

by Lifestyle Editor

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் வெற்றிகரமாக நடந்து வந்த நிகழ்ச்சிகளில் ஒன்று டான்ஸ் ஜோடி டான்ஸ். மிர்ச்சி விஜய் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.

மேலும் சினேகா, சங்கீதா மற்றும் பாபா பாஸ்கர் மாஸ்டர் ஆகியோர் நடுவர்களாக இருக்கிறார்கள். முதல் சீசன் மாபெரும் வெற்றியடைந்த நிலையில் தற்போது இரண்டாவது சீசன் துவங்கப்பட்டது.

இதன் பைனல் போட்டி நேற்று மாலை நடைபெற்ற நிலையில், இதில் சிறப்பு விருந்தினராக நடிகரும், நடன இயக்குனரும், இயக்குனரும், தயாரிப்பாளருமான ராகவா லாரன்ஸ் மாஸ்டர் கலந்துகொண்டார். மற்றும் பல திரையுலக நட்சத்திரங்களும் இந்த பைனல் போட்டியில் வருகை தந்திருந்தனர்.

இந்த நிலையில், டான்ஸ் ஜோடி டான்ஸ் சீசன் 2-வின் டைட்டில் வின்னராக அக்ஷதா – நவீன் ஜோடியை அறிவித்தனர். கடுமையான நடனத்தின் மூலம் முதலிடத்தை பிடித்த இந்த ஜோடிக்கு ரூ. 10 லட்சம் பரிசாக வழங்கப்பட்டது.

Related Posts

Leave a Comment