உடல் எடையை குறைக்க ‘கொத்தமல்லியை’ இப்படி யூஸ் பண்ணி பாருங்க!!

by Lifestyle Editor

பெரும்பாலானோர் தங்கள் உடலை மெலிதாகவும், கட்டுக்கோப்பாகவும் வைத்திருக்க மிகவும் கவனம் செலுத்துவார்கள். மேலும், உடல் பருமனாக இருப்பவர்கள், எடை குறைந்திடமாட்டோமா என்று யேங்கி கொண்டிருப்பார்கள். இப்படி பருமனாக இருப்பவர்கள் எடையை குறைக்க பல முயற்சிகளை மேற்கொண்டாலும் பலனில்லை.

ஆனால், வழக்கமான உடற்பயிற்சியுடன், சில வீட்டு வைத்தியங்களும் உடல் கொழுப்பை எரிக்க உதவும். அத்தகைய ஒரு வீட்டு வைத்தியம் தான் கொத்தமல்லி. உடல் எடையை குறைக்க கொத்தமல்லியை எப்படி பயன்படுத்தலாம் என்பதை பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம் வாருங்கள்.

கொத்தமல்லி தண்ணீர்:

இரவில் படுக்கும் முன் ஒரு டம்ளர் தண்ணீரில் ஒரு டீஸ்பூன் கொத்தமல்லி விதைகளை ஊற வைக்கவும். காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் அந்த நீரை குடிக்கவும். இப்படி தொடர்ந்து குடித்து வந்தால், அது செரிமானத்தை அதிகரித்து, வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்தும். உடல் எடையும் தானாக் குறையும்.

கொத்தமல்லி தேநீர்:

ஒரு ஸ்பூன் கொத்தமல்லி விதையை ஒரு கப் தண்ணீரில் போட்டு கொதிக்க வைக்கவும். இந்த நீரை வடிகட்டி சிறிது சூடாக இருக்கும் போது குடிக்கவும். சாப்பாட்டுக்கு முன் குடித்தால், பசி குறையும், செரிமானம் எளிதாகும் மற்றும் உடல் எடையும் குறையும்.

கொத்தமல்லி மசாலா:

கொத்தமல்லியை பல்வேறு உணவுகளில் பயன்படுத்தலாம். இதனால் உடல் எடை குறைய வாய்ப்பு அதுகம்.

கொத்தமல்லி விதை சூப்:

இந்த சூப் தயாரிக்கும் போது சுவை மற்றும் சத்துக்களை அதிகரிக்க கொத்தமல்லி விதைகளைப் பயன்படுத்தவும். கொத்தமல்லி விதைகளை வறுத்து அல்லது ப்யூரி செய்து சூப் தயாரிக்கலாம்.

தயிருடன் கொத்தமல்லி:

தயிருடன் சிறிது கொத்தமல்லித் தூளும், சிட்டிகை உப்பும் சேர்த்துச் சாப்பிட்டால் உடலுக்கு நல்லது. இதை வறுத்த இறைச்சி அல்லது வேகவைத்த உருளைக்கிழங்குடன் சேர்த்து சாப்பிடலாம்.

கொத்தமல்லி விதை ஸ்மூத்தி:

கொத்தமல்லி விதைகளை ஸ்மூத்திகளில் சேர்ப்பதால் உடலுக்கு ஊட்டச்சத்துக்கள் கிடைக்கும். அதை பழங்கள் மற்றும் பச்சை காய்கறிகளுடன் சேர்க்கவும். தயிர் அல்லது புரோட்டீன் பவுடர் ஷேக் செய்யும் போது இதைப் பயன்படுத்தலாம்.

சாலட்:

சாலட் சாப்பிடும் போது, கொத்தமல்லி தூளுடன் ஆலிவ் எண்ணெய், எலுமிச்சை சாறு, உப்பு மற்றும் கருப்பு மிளகு சேர்க்கவும். இது சாலட்டுக்கு சுவையை சேர்ப்பதோடு மட்டுமல்லாமல், வயிற்றையும் திருப்திப்படுத்துகிறது. எடையை குறைக்க சிறந்த வழிகளில் இதுவும் ஒன்று.

Related Posts

Leave a Comment