பீர்க்கங்காய் நிலக்கடலை சட்னி..

by Lifestyle Editor

தேவையான பொருட்கள் :

சட்னி அரைக்க தேவையானவை :

பீர்க்கங்காய் – 250 கிராம்

பெரிய வெங்காயம் – 1/2

தக்காளி – 1

பச்சை மிளகாய் – 4

பூண்டு – 5 பல்

புளி – சிறிய நெல்லிக்காய் அளவு

நிலக்கடலை – 3 டேபிள் ஸ்பூன்

கடலை பருப்பு – 1 டேபிள் ஸ்பூன்

மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்

வெல்லம் – 1/2 டீஸ்பூன்

நல்லெண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன்

கறிவேப்பிலை – ஒரு கொத்து

கொத்தமல்லி இலைக – சிறிதளவு

உப்பு – தேவையான அளவுதாளிக்க தேவையானவை :

நல்லெண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்

உளுத்தம் பருப்பு – 1/4 டீஸ்பூன்

கடுகு விதைகள் – 1/4 டீஸ்பூன்

வரமிளகாய் – 2

கறிவேப்பிலை – ஒரு கொத்து

செய்முறை :

கடாய் ஒன்றை அடுப்பில் வைத்து 1 டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும் நிலக்கடலை, கடலை பருப்பு, பூண்டு, பச்சை மிளகாய், புளி மற்றும் கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து குறைந்த தீயில் வறுத்துக்கொள்ளவும்.

இவை பொன்னிறமாக மாறியவுடன் வறுத்த பொருட்கள் அனைத்தையும் தனியாக ஒரு தட்டில் எடுத்து வைத்து ஆறவிடவும்.

பின்னர் அதே கடாயில் மீதமுள்ள நல்லெண்ணெய் ஊற்றி காய்ந்ததும் நறுக்கிய பெரிய வெங்காயம், தக்காளி, தோல் நீக்கி பொடியாக நறுக்கிய பீர்க்கங்காய், மஞ்சள் தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கலந்துகொள்ளுங்கள்.

பின்னர் கடாயை மூடி வைத்து 10 நிமிடங்களுக்கு காய்கறிகள் மென்மையாகும் வரை மிதமான தீயில் சமைக்கவும்.

இறுதியாக சிறிதளவு வெல்லம் மற்றும் கொத்தமல்லி இலைகளை சேர்த்து இரண்டு நிமிடங்கள் வதக்கி அடுப்பை அணைத்து அவற்றை ஆறவிடவும்.

அடுத்து ஒரு மிக்ஸி ஜாரில் ஏற்கனவே வறுத்து வைத்துள்ள வேர்க்கடலை கலவையை போட்டு ஓரளவிற்கு கொரகொரவென்று அரைத்துக்கொள்ளவும்.

பின்னர் அதனுடன் காய்கறி கலவையையும் சேர்த்து நன்றாக பேஸ்ட் போல் அரைத்து எடுத்துக்கொள்ளவும்.

தற்போது அடுப்பில் கடாய் ஒன்றை வைத்து நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுத்தம் பருப்பு, காய்ந்த மிளகாய் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளித்துக்கொள்ளவும்.

பிறகு இந்த தாளிப்பை அரைத்து வைத்துள்ள சட்னியுடன் சேர்த்து கலந்தால் சுவையான பீர்க்கங்காய் நிலக்கடலை சட்னி இட்லி மற்றும் தோசையுடன் பரிமாற ரெடி…

Related Posts

Leave a Comment