96
விஜய் தொலைக்காட்சியின் ஹிட் சீரியலாக ஒளிபரப்பாகி வருகிறது சிறகடிக்க ஆசை. இந்த வாரம் இதுவரை ஒளிபரப்பான கதைக்களத்தில் முத்து, மீனாவிற்காக ஒரு பெரிய ஆரடர் பிடித்து கொடுக்கிறார்.
500 மாலைகள் கட்டிக் கொடுத்தால் 2 லட்சத்திற்கு மேல் பணம், இரவு முழுவதும் கண் முழுத்து மீனா மற்றும் அவருக்கு தெரிந்தவர்கள் மாலை கட்டி எப்படியோ முடித்துவிட்டார்கள்.
அதை மண்டபத்திற்கு கொண்டு செல்லும் நேரத்தில் சிட்டி வண்டியை தூக்க எப்படியோ பல போராட்டத்திற்கு பிறகு முத்து-மீனா மாலையை சொன்னபடி கொடுத்துவிட்டார்கள், பணமும் பெற்றுவிட்டார்கள்.
இந்த நிலையில் நாளைய எபிசோடு புரொமோவில் ரோஹினி வசமாக சிக்க இருக்கிறார்.
அதாவது மனோஜ் ரோஹினி பார்லர் வந்து பெயரை பார்த்துவிடுகிறார். ரோஹினியிடம் அம்மா பெயர் தானே இருந்தது இது என்ன என்று கேட்கிறார், ரோஹினியும் அதிர்ச்சியில் நிற்கிறார்.