ஹமாஸ் அமைப்பை ஒழிக்கும் வரை தங்களது தாக்குதல் ஓயாது – இஸ்ரேல் இராணுவம்!

by Lifestyle Editor

ஹமாஸ் அமைப்பினரை ஒழிப்பது என்ற இஸ்ரேலின் இலக்கை எட்ட, ரஃபா தாக்குதல் முக்கியமானது என இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் ரஃபா நகர் மீதும் தாக்குதலை நடத்த இஸ்ரேல் இராணுவம் திட்டமிட்டுள்ளது.

அதன்படி ரஃபா பாதுகாப்பான பகுதி என்பதனால், ஏனைய பகுதிகளிலுள்ள மக்களும் ரஃபா பகுதியில் வந்து தஞ்சம் அடைந்துள்ளனர்.

இந்த நிலையில் ரஃபா பகுதியில் தாக்குதலை நடத்த திட்டமிட்டுள்ள இஸ்ரேல் இராணுவம், அங்கிருந்து மக்களை வெளியேறுமாறு உத்தரவிடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

காசா முனைக்கு உதவிப்பொருட்கள் கொண்டு செல்வதற்கு ரஃபா எல்லையே முக்கியமானதாக காணப்படுகின்றது என்றும் ரஃபா மீது தாக்குதல் நடத்தப்பட்டால் பாலஸ்தீன மக்கள் உதவிப் பொருட்களை பெற்றுக்கொள்ள முடியாது அவதிப்படும் நிலைக்கு தள்ளப்படுவார்கள் என ஐ.நா. கவலை தெரிவித்துள்ளது.

மேலும் இஸ்ரேல் தாக்குதலில் இதுவரை 31 ஆயிரம் பாலஸ்தீன மக்கள் கொல்லப்பட்டுள்ளதுடன்
80 சதவீத மக்கள் இடம் பெயர்ந்துள்ளதாக காசாவின் சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இவ்வாயினும் ஹமாஸ் அமைப்பை ஒழிக்கும் வரை தங்களது தாக்குதல் ஓயாது என இஸ்ரேல் இராணுவம் குறிப்பிட்டுள்ளது.

Related Posts

Leave a Comment