தங்கத்தின் விலை(04.03.2024) சரிவு..

by Lifestyle Editor

ஆபணத் தங்கத்தின் விலை கடந்த வாரத்தில் தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில், தற்போது தொடர்ந்து சில தினங்களாக குறைந்துவரும் நிலையில், இன்று சவரனுக்கு 40 ரூபாய் குறைந்துள்ளது. நேற்றைய தினத்தில் கிராம் ரூ.5,815 ஆகவும், சவரன், ரூ.46,520 ஆகவும் இருந்து வந்தது.

இந்நிலையில் சென்னையில் இன்று 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.5 குறைந்து, 5,810 ரூபாயாகவும், சவரனுக்கு ரூபாய் 40 குறைந்து, ரூபாய் 46 ஆயிரத்து 480 ஆக வீழ்ச்சியடைந்துள்ளது.

கடந்த வாரங்களில் 45 ஆயிரத்தை தொட்ட தங்கத்தின் விலை தற்போது சில நாட்களாக கடகடவென சரிந்துள்ளது பாமர மக்களிடையே மகிழ்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் அடுத்து வரும் நாட்களில் தங்கம் விலை மேலும் குறைவதற்கு வாய்ப்புள்ளதா என்ற கேள்வியும் மக்களிடையே எழுந்துள்ளது.

இதே போன்று வெள்ளியின் விலையும் குறைந்துள்ளது. கிராமுக்கு ரூ.75.40 ஆகவும், கிலோவிற்கு ரூ.75,400 ஆகவும் விற்கப்பட்டு வருகின்றது.

Related Posts

Leave a Comment