போதைபழக்கத்திற்கு அடிமையாகும் தர்ஷினி! கண்ணீர் விடும் ஞானம்

by Lifestyle Editor

பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் சீரியலில் பல திருப்பங்கள் அரங்கேறி வருகின்றது.

பெண்களின் அடிமைதனத்தை மையமாக எடுக்கப்பட்டுள்ள இந்த சீரியல் பெண்கள் மட்டுமின்றி ஆண்களும் அவதானித்து வருகின்றனர்.

குறித்த சீரியல் பரபரப்பாக சென்று கொண்டிருந்த நிலையில், கடந்த சில மாதத்திற்கு முன்பு சீரியலின் நாயகனான குணசேகரன் திடீர் மாரடைப்பினால் உயிரிழந்தார்.

அவருக்கு பதிலாக நடிகர் வேல ராமமூர்த்தியை களமிறக்கியுள்ளனர். ஆனாலும் சுவாரசியம் இல்லாமல் சென்று கொண்டிருப்பதுடன், குணசேகரன் மறைவிற்கு பின்பு இறங்கிய டிஆர்பி-யை ஏற்ற பல வழிகளில் சீரியல் குழுவினர் முயற்சித்து வருகின்றனர்.

தற்போது அந்த டிஆர்பி-யை கதிரை வைத்து பிரபல ரிவி அடைந்துவிட்டது என்று தான் கூற வேண்டும். ஏனெனில் கதிர் தனது அண்ணனுக்கு எதிராக மாறியுள்ளார்.

கதிர் மட்டுமின்றி ஞானமும் குணசேகரனை எதிர்த்து நிற்கும் நிலையில், ஈஸ்வரி குணசேகரனின் சதியால் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

தற்போது ப்ரொமோ காட்சி ஒன்று வெளியாகியுள்ளது. இதில் தர்ஷினிக்கு போதை பொருளை தண்ணீரில் கலந்து கொடுத்து, அவரை சித்ரவதை செய்து வருகின்றனர்.

ஞானம் கையில் உள்ள பணத்தை கதிரின் மகளுக்கு பீஸ் கட்டுவதற்கு கொடுத்த போது நந்தினி வேண்டாம் என்று மறுத்துள்ளார். கதையின் போக்கு பரபரப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில், அடுத்து என்ன நடக்க இருக்கின்றது என்ற ஆவல் பார்வையாளர்களுக்கு எழுந்துள்ளது.

Related Posts

Leave a Comment