முகப்பருக்களை போக்க சூப்பரான வீட்டு வைத்தியம்..

by Lifestyle Editor

காலையில் எழுந்ததும் கண்ணாடி முன் நிற்கும் போது, சில சமயம் ஆச்சர்யமாக இருக்கும். ஏனெனில், ஒரே இரவில் முகத்தில் பருக்கள் வந்திருக்கும்.

பலர் இந்த மாதிரி பிரச்சினைகளை சந்தித்திருப்பார்கள். இவற்றில் இருந்து எப்படி நிவாரணம் பெறுவது என்று யோசிக்கிறீர்களா? அப்போ இந்த குறிப்புகளை பின்பற்றுங்கள்.

முகத்தில் உள்ள பருக்களை போக்க குறைந்தது ஒரு வாரமாவது ஆகும் என்று எல்லோரும் நினைக்கிறார்கள். ஆனால் ஒரே இரவில் இவற்றில் இருந்து நிவாரணம் பெறலாம். எப்படியெனில், சிறிது பழுத்த பப்பாளியை இரவில் படுக்கும் முன் பருக்கள் மீது தடவினால் காலையில் பருக்கள் மறையும்.

அதுபோல், இரவில் தூங்கும் முன் முகப்பரு உள்ள இடங்களில் முல்தானி மெட்டியை தடவ வேண்டும். காலையில் எழுந்தவுடன் கழுவவும். இப்படி செய்தால் பருக்கள் அனைத்தும் ஒரே இரவில் மறைந்து விடும்.

அதுபோல், நீங்கள் தக்காளிச் சாற்றை முகத்தில் தடவினால் முகப்பரு தழும்புகள் குறைவது மட்டுமின்றி சருமம் பொலிவு பெறும். இவ்வாறு செய்வதால் சருமம் பொலிவாகும்.

முக்கிய குறிப்பு: நீங்கள் ஒருபோதும் உங்கள் கைகளால் முகத்தில் இருக்கும் பருவை பிய்க்க வேண்டாம். இப்படி செய்தால் முகத்தில் கரும்புள்ளிகள் உருவாகும். அவை முக அழகைக் கெடுக்கும்.

Related Posts

Leave a Comment