முகம் பளபளவென இருக்க டிப்ஸ்..!

by Lifestyle Editor

முகத்தை சுத்தப்படுத்துதல் :

இரவு தூங்குவதற்கு முன், உங்கள் முகத்தை நன்றாக சுத்தப்படுத்துங்கள். காலையில் போட்ட மேக்கப், வெளியே சென்றிருந்தால் முகத்தில் படர்ந்திருக்கும் அழுக்கு, மாசுபாடு போன்றவற்றை தண்ணீரிட்டு கழுவுங்கள். உங்கள் சருமத்திற்கு தீங்கிழைக்காத க்ளீன்சரை பயன்படுத்துங்கள். இது நாள் முழுவதும் உங்கள் சருமத்தில் சேர்ந்துள்ள அசுத்தங்களை சுத்தப்படுத்தும். இது முகத்தில் துளைகள் ஏற்படுவதை தடுத்து முகப்பருக்கள் ஏற்படாமல் பாதுகாக்கும்.

சருமத்திற்கு நீர்ச்சத்து அவசியம் :

இரவு முழுவதும் உங்கள் சருமம் நீர்சத்தோடு இருக்க வேண்டுமென்றால் மாய்ஸ்சரைசர் பயன்படுத்துங்கள். அது இரவில் பயன்படுத்தும் க்ரீமாகவோ அல்லது உங்கள் சருமத்திற்கு பொறுந்தக் கூடிய நீர்ச்சத்து நிறைந்த மாய்ஸ்சரைசராகவோ கூட இருக்கலாம். இது சருமத்தில் ஈரப்பதத்தை தக்கவைப்பதோடு தூங்கும் போது உங்கள் சருமத்தை புத்துயிர் பெற வைக்கிறது.

கண் நலம் :

உங்கள் கண்களைச் சுற்றியுள்ள சருமம் மென்மையாக இருப்பதோடு, இந்தப் பகுதியில் உங்கள் முகத்திற்கு தேவைப்படுவதை விட அதிக பராமரிப்பு தேவைப்படும். ஆகவே கருந்திட்டுகள், கோடுகள் போன்றவை ஏற்படாமல் இருக்க கண்களுக்கு பயன்படுத்தும் க்ரீம் அல்லது சீரம்மை உபயோகியுங்கள். இதை உங்கள் கண்களைச் சுற்றியுள்ள பகுதியில் விரல்களால் தடவவும்.

நீர்ச்சத்து :

இரவு படுப்பதற்கு முன் நன்றாக நீர் அருந்துங்கள். சருமம் ஆரோக்கியமாக இருப்பதற்கு நீர்ச்சத்து மிகவும் அவசியமாகும். தினமும் தேவையான அளவு தண்ணீர் பருகினால், உங்கள் சருமத்தில் உள்ள நச்சுக்கள் வெளியேற்றப்பட்டு பளபளப்பான நிறம் கிடைக்கிறது.

மொபைல் நோண்டாதீர்கள் :

இரவு படுப்பதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பே மொபைல், லேப்டாப் போன்ற எலெக்ட்ரானிக் சாதனங்களை பயன்படுத்துவதை நிறுத்திவிடுங்கள். மொபைலின் திரையிலிருந்து வெளிவரும் நீல நிற வெளிச்சம் உங்கள் தூக்கத்தை கெடுத்து சரும ஆரோக்கியத்தை பாதிக்கிறது.

மனதிற்கு இதமளிக்கும் பயிற்சிகள் :

இரவு தூங்குவதற்கு முன்பு தியானம், யோகா, மூச்சுப் பயிற்சி போன்ற மிதமான பயிற்சிகளை செய்யுங்கள். நாள் முழுவதும் மன அழுத்தத்தோடு இருந்தால் களைப்பாக உணர்வதோடு உங்கள் சருமமும் பாதிப்படையும். மேற்கூரிய பயிற்சிகளை இரவில் செய்யும் போது உங்கள் சருமத்திற்கு தேவையான ஆரோக்கியம் கிடைக்கிறது.

Related Posts

Leave a Comment