உங்கள் சருமத்தை இயற்கையாக பாதுகாக்கும் வழிமுறைகள் ..

by Lifestyle Editor

முட்டைக்கோஸ் : உங்கள் சரும பாதுகாப்பிற்கு பச்சை காய்கறிகளும் உதவுகிறது. வெயிலால் பாதிக்கப்பட்ட இடத்தில் சில முட்டைக்கோஸ் இலைகளை 15 நிமிடங்கள் வைக்கவும். இதனை வாரத்திற்கு இரண்டு முறை தொடர்ந்து செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

தயிர் : வெயிலில் சென்றுவிட்டு வீடு திரும்பும் போது புளித்த தயிரில் சிட்டிகை மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக குழைத்து முகம், கழுத்து, கை, கால் பகுதி முழுக்க தடவி 10-15 நிமிடங்கள் ஊறவிடுங்கள். பிறகு முகத்தை சுத்தமான நீரில் கழுவி வந்தால் வெயிலால் தோன்றிய கருமை விரைவில் மறைந்துவிடும்.

கற்றாழை : கற்றாழை அழற்சி எதிர்ப்பு பண்புகளையும் கொண்டுள்ளது. இது மெலனினை அடக்குவதற்கு அறியப்படுகிறது. எனவே உங்கள் சருமத்தில் கற்றாழை ஜெல்லை தவறாமல் பயன்படுத்துவது உங்கள் சருமத்தை பொலிவாக மாற்ற உதவும்.

தக்காளி : தக்காளி சருமத்திற்கு அழகை தருகிறது. தக்காளி பேஸ்ட் மற்றும் கற்றாழை சாற்றில் சம அளவு கலந்து பேஸ்ட் செய்து உங்கள் குறைந்தது 30 நிமிடங்களாவது உங்கள் தோலில் இருக்கும் வகையில் அப்ளை செய்யுங்கள். இதனை தொடர்ந்து செய்து வந்தால் ஓரிரு நாட்களில் நீங்கள் மாற்றத்தைக் காண்பீர்கள். சண் டேனை மட்டுமின்றி, கரும்புள்ளிகளை சரி செய்கிறது.

Related Posts

Leave a Comment