பொடுகு தொல்லையில் இருந்து உங்கள் தலைமுடியை பாதுகாப்பது எப்படி?

by Column Editor

ஹெட் மசாஜரைப் பயன்படுத்தி வாரத்திற்கு ஒரு முறை உங்கள் உச்சந்தலையில் எக்ஸ்ஃபோலியேட் எனும் தோலை நீக்கும் செயல்முறையை செய்யவும்.

குளிர்காலத்தில் நாம் அனுபவிக்கும் மிகவும் பொதுவான பிரச்சனை பொடுகு ஆகும். குளிர்காலம் உங்கள் சருமத்தையும் கூந்தலையும் மிகவும் வறண்டதாக மாற்றும். இந்த காலகட்டத்தில் உங்கள் உச்சந்தலை உலர்வதன் காரணமாக பொடுகு பிரச்சனை வரலாம். இது முடி உதிர்வுக்கும் வழிவகுக்கும். எனவே குளிர்காலத்தில் உங்கள் தலைமுடி, முடி உதிர்தல் போன்ற அதிக பாதிப்புகளுக்கு உள்ளாகாதவாறு கட்டுப்பாட்டில் வைத்திருப்பது மிகவும் அவசியம். இந்த பிரச்சனையில் இருந்து விடுபட பல வீட்டு வைத்தியங்கள் உள்ளன. அவை என்ன என்பது குறித்து பின்வருமாறு காணலாம்.

உங்கள் உச்சந்தலையை எக்ஸ்ஃபோலியேட் செய்யவும்:

ஹெட் மசாஜரைப் பயன்படுத்தி வாரத்திற்கு ஒரு முறை உங்கள் உச்சந்தலையில் எக்ஸ்ஃபோலியேட் எனும் தோலை நீக்கும் செயல்முறையை செய்யவும். இது உங்கள் உச்சந்தலையை ஆழமாக சுத்தப்படுவதோடு, பொடுகுக்கு வழிவகுக்கும் அழுக்குகளைக் குறைக்கவும் உதவும். பொடுகு என்பது உச்சந்தலையில் மிகவும் பொதுவான பிரச்சனையாக இருந்தாலும், முடி மற்றும் உச்சந்தலையின் தேவைகளை கவனித்துக்கொள்வது அவசியம்.

வறண்ட வானிலை காரணமாக உங்கள் உடல் அதிக ஈரப்பதத்தை இழப்பதால், குளிர்காலம் நம் சருமத்திற்கும் கூந்தலுக்கும் மிகவும் கடுமையானதாக இருக்கும். நீங்கள் ஆரோக்கியமான உச்சந்தலை மற்றும் அழகான வலுவான கூந்தலை அடைய விரும்பினால், எண்ணெய் மசாஜ்கள் மற்றும் ஹேர் மாஸ்க்குகள் போன்ற கூந்தல் பராமரிப்பு வழக்கத்தை கடைபிடிக்க வேண்டும். அதேபோல உங்கள் தலைமுடிக்கு ஏற்றவாறு சில பராமரிப்பு பொருட்களை பயன்படுத்த வேண்டும்.

எலுமிச்சை சாறு:

பொடுகைப் போக்க சிறந்த வழிகளில் ஒன்று, வழக்கமான எண்ணெயுடன் எலுமிச்சைச் சாற்றைப் பயன்படுத்துவது. எலுமிச்சை சாற்றின் சில துளிகளை தேங்காய் எண்ணெயில் கலந்து கூந்தலில் தடவவும். நீங்கள் 100% இயற்கையான மற்றும் சுத்தமான தேங்காய் எண்ணெயைப் பயன்படுத்தலாம். இந்த கலவையை உங்கள் உச்சந்தலையில் நேரடியாக தடவி 3-5 நிமிடங்கள் மசாஜ் செய்யலாம். பின்னர் 1 மணி நேரம் வைத்திருந்து கூந்தலை அலசுங்கள். இது உடனடி நிவாரணம் மற்றும் பொடுகு தொல்லையில் இருந்து விடுபட உதவும்.

ஷாம்பூவில் மாற்றம் கொண்டு வாருங்கள்:

உங்கள் வழக்கமான ஷாம்பூவில் சில துளிகள் தேயிலை மர எசென்ஷியல் எண்ணெய் அல்லது மிளகுக்கீரை எசென்ஷியல் எண்ணெய்யை சேர்த்து பயன்படுத்தலாம். 2 முதல் 3 முறை பயன்படுத்திய பிறகு சிறப்பான முடிவுகளைக் காணலாம்.

ஆன்டி டாண்ட்ரஃப் ஷாம்பு:

உங்கள் உச்சந்தலையில் பொடுகுத் தொல்லையை எதிர்த்துப் போராட, அதில் மிளகுத்தூள் அடங்கிய ஆன்டி டாண்ட்ரஃப் ஷாம்பூவை பயன்படுத்தலாம். இது லேசான பொடுகுத் தொல்லை இருப்பவர்களில் சிறப்பாகச் செயல்படும். ஆனால் உங்களுக்கு அதிக அளவில் பொடுகுப் பிரச்சனைகள் இருந்தால் இந்த முறை பலன் தராது.

வேப்ப எண்ணெய் பயன்படுத்தவும்:

உச்சந்தலையில் அரிப்பு மற்றும் பொடுகுத் தொல்லையிலிருந்து நிவாரணம் பெற வேப்ப எண்ணெய் உதவிச் செய்கிறது. இந்த எண்ணெயை மைல்டு ஷாம்பூவுடன் கலந்து வாரத்திற்கு இரண்டு முறை பயன்படுத்தி வந்தால், தலையில் பொடுகுத் தொல்லை இருக்காது.

Related Posts

Leave a Comment