அமெரிக்காவில் இருந்து வந்த மாணவி ஓட்டு போட முடியாமல் ஏமாற்றம்

by Lifestyle Editor

ஓட்டு போடுவதற்காகவே அமெரிக்காவிலிருந்து ஆர்வமுடன் வந்த மாணவி ஓட்டு போட முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றார். வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாததால் அவர் ஓட்டு போட முடியாமல் போனது. அந்த பகுதியை சேர்ந்த வேறு சிலரும் வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாததால் ஓட்டு போட முடியாமல் திரும்பிச் சென்றனர்.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நேற்று நடந்தது. ஈரோடு மாநகராட்சி 5வது வார்டுக்கு உட்பட்ட கொங்கம்பாளையத்தில் உள்ள மாநகராட்சி நடுநிலைப் பள்ளி கூடத்தில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடி நிலையத்தில் நேற்று காலையில் இருந்து வாக்குப்பதிவு நடந்தது . அதே பகுதியை சேர்ந்த மோனிகா என்ற 19 வயது இளம்பெண் அமெரிக்காவில் உள்ள கல்லூரியில் படித்து வருகிறார்.

இந்தநிலையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வந்ததால் அவர் தனது வாக்கை பதிவு செய்யவேண்டும், ஜனநாயக கடமையை ஆற்ற வேண்டும் என்பதற்காக அமெரிக்காவிலிருந்து ஈரோட்டிற்கு வந்து வாக்குச்சாவடி மையத்திற்கு சென்றார். ஆனால் அவரது பெயர் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்காளர் பட்டியலில் இடம் பெறவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த மோனிகா அங்கிருந்து தேர்தல் அலுவலர்களிடம் சென்று தேசிய வாக்காளர் பட்டியலில் தனது பெயர் இருப்பதாக கூறினார்.

இதை அடுத்து அவரது பெயரை பட்டியலில் தேடிப்பார்த்த தேர்தல் அதிகாரிகள், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லை என்று தெரிவித்தனர். இதனால் மோனிகா தனது வாக்கை செலுத்த முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றார்.

மாணவி மோனிகா போலவே அதே பகுதியை சேர்ந்த வேறு சிலரும் வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாததால் ஓட்டு போட முடியாமல் திரும்பிச் சென்றனர்.

Related Posts

Leave a Comment