10ம் வகுப்பு பொதுத்தேர்வு- கோவையில் 41,526 மாணவர்கள் தேர்வெழுதுகின்றனர் ..

by Lifestyle Editor

கோவை மாவட்டத்தில் அரசு பள்ளிகள், தனியார் பள்ளி, சுயநிதி பள்ளிகள் என 526 பள்ளிகளில் பயிலும் 20,936 மாணவர்கள், 20,590 மாணவிகள் என மொத்தம் 41,526 மாணவ மாணவிகள் தேர்வு எழுதுகின்றனர். கோவை மாவட்டத்தில் தனித்தேர்வு மையங்களையும் சேர்த்து 157 மையங்களில் தேர்வு நடைபெறுகிறது.

காலை 10 மணிக்கு துவங்கும் இந்த தேர்வானது மதியம் 1.15 மணிக்கு முடிவடைகிறது. இந்த தேர்வில் முறைகேடுகளை தடுப்பதற்காக 200 பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது. மேலும் 157 முதன்மை கண்காணிப்பாளர்கள், 157 துறை அதிகாரிகள், நியமிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் தேர்வு துவங்குவதற்கு அரை மணி நேரத்திற்கு முன்னதாகவே அனைத்து தேர்வர்களும் தேர்வு எழுதும் மையங்களுக்கு வருகை புரிந்திருக்க வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts

Leave a Comment