சிபிஎஸ்இ முதல்கட்ட பொதுத்தேர்வு ரத்து?? முறைகேடு நடைபெற்றதாக மேலாண் கூட்டமைப்பினர் புகார்…

by Column Editor

முறைகேடுகள் நடைபெற்றாகக் கூறி சிபிஎஸ்இ 10, 12-ம் வகுப்பு தேர்வுகளை ரத்து செய்ய சிபிஎஸ்இ பள்ளிகள் மேலாண்மை கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழகத்தில் உள்ள சில சிபிஎஸ்இ பள்ளிகளில் 10 மற்றும் 11 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளுக்கான வினாத்தாள்கள் முன்கூட்டியே வெளியிடப்படுவதாகவும், ஆசிரியர்கள் தேர்வில் மாணவர்களுக்கு உதவுவதாகவும் புகார் எழுந்துள்ளது. தமிழகத்தில் நடப்புக் கல்வியாண்டில் இருந்து CBSE பள்ளிகளில் 10 மற்றும் 12 வகுப்பு பொதுத்தேர்வுகள் இரண்டு கட்டங்களாக நடைபெறுகின்றன. அதன்ப்டி கடந்த மாதம் சிபிசிஎஸ்இ 10-ம் வகுப்பு முதல் பொதுகால தேர்வுகளும் இந்த மாதம் 12-ம் வகுப்பு தேர்வுகளும் நடைபெற்றன. 2ம் கட்ட தேர்வு வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ளது.

அதன்படி, தற்போது நடந்து முடிந்த முதற்கட்ட 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் பல சிபிஎஸ்இ பள்ளிகளில் முறைகேடு நடந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. முதல் பொதுநல தேர்வில் முறைகேடுகள் நடந்ததை சுட்டிக்காட்டி, சிபிஎஸ்இ பள்ளிகள் மேலாண் கூட்டமைப்பினர் ஒன்றிய அமைச்சர் பிரதானுக்கு கடிதம் அனுப்பியுள்ளனர். அதில் சில பள்ளிகளில் தேர்வு நடைபெறுவதற்கு முன்னதாகவே மாணவ மாணவிகளுக்கு வினாத்தாள்களை வழங்கியதாகவும், அப்படி தெரியாத கேள்விகளுக்கு ‘C’ என்ற பதிலை தேர்வு செய்ய வேண்டும் என ஆசிரியர்கள் மாணவர்களுக்கு அறிவுறுத்தியதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதன் மூலம் அனைத்து கேள்விகளுக்கும் ‘C’ என்ற தெரிவில் ஆசிரியர்கள் மாற்றியமைத்துக் கொள்வதாகவும் கூறப்படுகிறது. மேலும் பள்ளியை சாராத ஒரே ஒரு நபர் மட்டுமே காண்காணிப்பாளராக நியமிக்கப்படுவதால் எளிதில் முறைகேடு நடைபெறுவதாகவும், இந்த முறைகேடுகளி மூலம் பள்ளியில் 100% தேர்ச்சி காட்டப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆகையால் தற்போது சிபிஎஸ்இ முதல்கட்ட பொதுத் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என சிபிஎஸ்இ பள்ளிகளின் மேலாண் கூட்டமைப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Posts

Leave a Comment