காசா அகதிகள் முகாம் மீது இஸ்ரேல் தாக்குதல்-70 பேர் பலி

by Lifestyle Editor

இஸ்ரேல் நாட்டின் மீது கடந்த ஆண்டு அக்டோபர் 7 ஆம் ஆண்டு ஹமாஸ் அமைப்பினர் ராக்கெட் தாக்குதல் நடத்தியதுடன், இஸ்ரேல் பகுதிக்குள் அத்துமீறி நுழைந்து, ராணுவவீரர்கள் மற்றும் குழந்தைகளை கொன்றனர்.

அதன்பின்னர்,240 பேரை பிணைக் கைதிகளாக காஸா முனைக்கு கொண்டு வந்தனர்.

இதற்குப் பதிலடியாக இஸ்ரேல் நாடு ராக்கெட் தாக்குதல் நடத்தி வரும் நிலையில், பல நாடுகள் மற்றும் ஐக்கிய நாடுகள் அமைப்பு கூறியும் காஸா மீது உக்கிரமுடன் தாக்குதலை நடத்தி வருகிறது.

இந்த நிலையில், காஸா முனையில் டேர் அல் பலாஹ் நகரின் ஜவைதா பகுதியில் உள்ள அகதிகள் முகாமைக் குறிவைத்து, நேற்றிரவு முதல் அதிகாலை வரை இஸ்ரேல் படைகள் நடத்திய தாக்குதலில் 70 க்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டதாக பாலஸ்தீன மீடியா தெரிவித்துள்ளது.

இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Posts

Leave a Comment