தைராய்டு இருக்கும் பெண்கள் கர்ப்பகாலத்தில் எழும் பிரச்சனைகள்…

by Lifestyle Editor

கர்ப்பம் என்பது பெண்களின் உடலில் பல்வேறு உடல் ரீதியான மாற்றங்களை ஏற்படுத்தக்கூடிய ஒரு குறிப்பிடத்தக்க பயணமாகும். ஆரோக்கியமான கர்ப்பத்திற்கு தைராய்டு ஹார்மோன்கள் மிக முக்கிய பங்கை வகிக்கின்றன. தைராய்டு ஹார்மோன்கள் உடலின் வெப்பநிலையை கட்டுப்படுத்துகின்றன மற்றும் ஆற்றல் வெப்பநிலை மற்றும் வளர்ச்சியை ஊக்குவிக்கின்றன. ஒரு பெண்ணின் கர்ப்ப காலத்தில் பொழுது ஈஸ்ட்ரோஜன் மற்றும் HCG போன்ற பல்வேறு ஹார்மோன்களில் ஏற்ற இறக்கங்கள் காணப்படுகிறது.

இந்த மாற்றங்கள் தைராய்டு சுரப்பியை பாதித்து அதன் ஹார்மோன் உற்பத்தியில் மாற்றத்தை ஏற்படுத்துகிறது. கர்ப்பத்தின்போது தைராய்டு தோராயமாக 50 சதவீத அதிக ஹார்மோன்களை உற்பத்தி செய்து, தாய் மற்றும் குழந்தையின் தேவைகளை பூர்த்தி செய்கிறது. இந்த ஹார்மோன்கள் குழந்தையின் மூளை மற்றும் நரம்பு வளர்ச்சிக்கு குறிப்பாக முதல் மூன்று மாதங்களில் மிகவும் அவசியம். தைராய்டு ஹார்மோன்கள் போதுமான அளவு உற்பத்தி ஆகவில்லை என்றால் குழந்தை வளர்ச்சியில் தொய்வு ஏற்படலாம்

வெற்றிகரமான கர்ப்பத்திற்கு தைராய்டு ஹார்மோன் செயல்பாடு சிறந்த முறையில் பராமரிக்கப்பட வேண்டும். ஹைப்போதைராய்டிசம் அல்லது ஹைப்பர்தைராய்டிசம் ஆகிய இரண்டு தைராய்டு நிலைகளின் காரணமாக கர்ப்பகாலத்தில் மாற்றங்கள் ஏற்படலாம்.

ஹைப்போதைராய்டிசம் காரணமாக தைராய்டு சுரப்பி போதுமான அளவு ஹார்மோன்களை உற்பத்தி செய்யாதபோது கர்ப்பம் கலைதல், குழந்தை முன்கூட்டியே பிறந்து விடுதல் மற்றும் குழந்தையின் வளர்ச்சியில் பிரச்னைகள் எழுகிறது. சோர்வு, உடல் எடை அதிகரித்தல் மற்றும் குளிருக்கு உணர்திறன் போன்றவை ஹைப்போதைராய்டிசத்திற்கான அறிகுறிகள்.

மறுபுறம் ஹைப்பர்தைராய்டிசம் காரணமாக அதிகப்படியான தைராய்டு ஹார்மோன் உற்பத்தி செய்யப்பட்டு, அதனால் ப்ரீ எக்கலாம்சியா மற்றும் குழந்தை குறைப் பிரசவத்தில் பிறத்தல் போன்றவை ஏற்படலாம். காரணம் இல்லாமல் உடல் எடை குறைதல், பதட்டம் மற்றும் அதிகரித்த இதயத்துடிப்பு போன்றவை ஹைப்பர்தைராய்டிசத்திற்கான அறிகுறிகள்.

கர்ப்பத்தின்போது வழக்கமான பரிசோதனைகளை மேற்கொள்வது அவசியம். சோதனைகளின் மூலமாக பிரச்னைகளை கண்டறிந்த பின்பு தைராய்டு கோளாறுகளுக்கு சிகிச்சை அளிப்பதன் மூலமாக வரக்கூடிய பெரிய அபாயங்களை தடுக்கலாம். தைராய்டு கோளாறுகளால் பாதிக்கப்பட்டுள்ள கர்ப்பிணி பெண்களுக்கு சிகிச்சைகள் அவசியம். கர்ப்பம் அடைவதற்கு முன்னரே தைராய்டு சுரப்பியை நல்ல முறையில் பராமரித்து கொள்வது நல்லது.

கருத்தரிப்பதற்கு முன்பே தைராய்டு செயல்பாடுகளை சிறந்த முறையில் பராமரிப்பது ஆரோக்கியமான கர்ப்பத்திற்கு அவசியம். நேர்மறையான விளைவுகளை ஏற்படுத்துவதில் இது முக்கிய பங்கு வகிக்கிறது. வழக்கமான தைராய்டு பரிசோதனைகளை செய்து, தைராய்டு சுரப்பியின் ஆரோக்கியத்தை பராமரிப்பது தாய் மற்றும் கரு ஆகிய இருவரின் நலனுக்கும் நல்லது.

Related Posts

Leave a Comment