அயலான் படத்தின் இதுவரை வசூல்.. இத்தனை கோடியா

by Lifestyle Editor

சிவகார்த்திகேயன் திரை வாழ்க்கையில் பிரம்மண்ட பொருட்செலவில் உருவான திரைப்படம் அயலான். ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

சில இடங்களில் இப்படம் தோல்வியை சந்தித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், அயலான் 2 படத்தை எடுக்க தயாரிப்பு நிறுவனம் தயாராகிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

அயலான் படத்திற்கு CG செய்த நிறுவனம் அயலான் 2 குறித்து சமீபத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தனர். இதனால் ரசிகர்களும் ஆவலுடன் அயலான் 2 படத்திற்காக காத்துகொண்டு இருக்கிறார்கள்.

இந்நிலையில், கடந்த 12ஆம் தேதி உலகளவில் வெளிவந்த அயலான் படம் இதுவரை எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, அயலான் திரைப்படம் இதுவரை உலகளவில் ரூ. 82 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts

Leave a Comment