குறைந்தது தங்கம் விலை..

by Lifestyle Editor

சென்னையில் கடந்த சில நாட்களாக தங்கம் விலை ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. நேற்று முன்தினம் சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ஒரு சவரன் ரூ.46,960க்கு விற்பனை செய்யப்பட்டது.

நேற்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 160 ரூபாய் குறைந்து ஒரு சவரன் தங்கம் 46,800 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.20 குறைந்து ரூ.5,850 ஆக விற்பனை செய்யப்பட்டது.

இந்நிலையில் சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.40 குறைந்து ரூ.5,810க்கும், சவரனுக்கு ரூ.320 குறைந்து ஒரு சவரன் ரூ.46,480க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை கிராமுக்கு 60 காசுகள் குறைந்து ஒரு கிராம் ரூ.77.40க்கும் ஒரு கிலோ ரூ.77,400க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Related Posts

Leave a Comment