நாமினேஷனில் கொத்தாக மாட்டிய 6 போட்டியாளர்கள்… வெளியேறும் இருவர் யார் யார்?

by Lifestyle Editor

பிரபல ரிவியில் கடந்த அக்டோபர் மாதம் 1ம் தேதி ஆரம்பிக்கப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். தற்போது 84 நாட்களை கடந்து செல்கின்றது.

இந்நிகழ்ச்சியிலிருந்து அனன்யா, பவா செல்லதுரை, விஜய் வர்மா, வினுஷா மற்றும் யுகேந்திரன், அன்ன பாரதி, மற்றும் ரெட் கார்டு கொடுக்கப்பட்டு பிரதீப், ஐஷு, கானா பாலா, ப்ராவோ, அக்ஷயா, ஜோவிகா, கூல் சுரேஷ், சரவண விக்ரம் என 14 பேர் வெளியேறியுள்ளனர்.

தற்போது 84 நாட்களை கடந்தாலும் வெற்றியாளர் யார் என்பதை இன்னும் கணிக்கவே முடியாமல் நிகழ்ச்சி சென்று கொண்டிருக்கின்றது.

இந்த வாரம் பிக் பாஸ் வீட்டிலிருந்து ரவீனா, மணி சந்திரா, மாயா, தினேஷ், நிக்ஷன், விஷ்ணு என 6 பேர் நாமினேட் ஆகியுள்ளனர். இந்த வாரம் நிச்சயமாக இரண்டு நாமினேஷன் இருக்கும் என்றும் அதில் யார் வெளியேறுவார்கள் என்ற எதிர்பார்ப்பு வாரத்தின் முதல் நாளே ஆரம்பித்துவிட்டது.

Related Posts

Leave a Comment