தொடர்ந்து அதிகரிக்கும் தங்கம் விலை..

by Lifestyle Editor

சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 40 ரூபாய் அதிகரித்து ஒரு சவரன் தங்கத்தின் விலை 47 ஆயிரத்து 40 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

சென்னையில் தங்கம் விலை கடந்த சில நாட்களாக தொடர்ந்து உயர்ந்து வருகிறது. கடந்த சனிக்கிழமை ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 120 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் தங்கம் விலை 47,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இதேபோல் ஆபரண தங்கம் கிராமுக்கு 15 ரூபாய் அதிகரித்து 5 ஆயிரத்து 875 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. தங்கம் விலை அதிகரித்த போதிலும் வெள்ளி விலை குறைந்து விற்பனையானது. வெள்ளி கிராமுக்கு 50 காசுகள் குறைந்து ரூ.80.50க்கும் கிலோவுக்கு 500 குறைந்து 81,000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இந்த நிலையில், இன்றும் தங்கம் விலை அதிகரித்துள்ளது. சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 40 ரூபாய் அதிகரித்து ஒரு சவரன் தங்கத்தின் விலை 47 ஆயிரத்து 40 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதேபோல் தங்கம் விலை கிராமுக்கு 5 ரூபாய் அதிகரித்து ஒரு கிராம் தங்கம் 5 ஆயிரத்து 880 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Related Posts

Leave a Comment