சவரனுக்கு ரூ. 120 குறைந்தது தங்கத்தின் விலை…

by Column Editor

நேற்று மாலை நிலவரப்படி தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 96 குறைந்து விற்பனையான நிலையில் இன்று காலை நிலவரப்படி சவரனுக்கு ரூ. 120 விலை குறைந்துள்ளது.

தங்கம் விலையானது கடந்த இரண்டு நாட்களாக உயர்ந்து வந்த நிலையில் இன்று குறைந்துள்ளது.

சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் 4735 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. நேற்று மாலை நிலவரப்படி இதன் விலை ரூ. 4750ஆக இருந்தது. இன்று தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 15 குறைந்துள்ளது.

அதன்படி, நேற்று மாலை நிலவரப்படி ரூ. 38,000-க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு சவரன் ஆபரணத் தங்கம் இன்று ரூ. 120 குறைந்து ரூ.37,880-க்கு விற்பனையாகிறது.

ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை கோயம்புத்தூர் மற்றும் திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் ரூ. 4735 விற்பனை செய்யப்படுகின்றது.

தங்கத்தின் விலையானது குறைந்துள்ள நிலையில், வெள்ளியின் விலை சற்று அதிகரித்தே காணப்படுகின்றது. ஒரு கிராம் வெள்ளி நேற்று மாலை நிலவரப்படி ரூ. 68.70 விற்பனை ஆன நிலையில் இன்று கிராமிற்கு ரூ. 0.30 அதிகரித்து 69.00 விற்பனை செய்யப்படுகிறது.

நேற்று மாலை நிலவரப்படி தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 96 குறைந்து விற்பனையான நிலையில் இன்று காலை நிலவரப்படி சவரனுக்கு ரூ. 120 விலை குறைந்துள்ளது.

Related Posts

Leave a Comment