58
சென்னையில் நேற்று தங்கம் விலை சவரனுக்கு ரூ. 80 குறைந்த நிலையில், இன்று அதிரடியாக உயர்ந்துள்ளது.
அதன்படி , 22 காரட் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.20 உயர்ந்து ஒரு கிராம் ரூ.5,760-க்கும், சவரனுக்கு ரூ.160 உயர்ந்து ஒரு சவரன் ரூ.46,080-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இதேபோல 18 காரட் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.16 உயர்ந்து ஒரு கிராம் ரூ. 4,718-க்கும் சவரனுக்கு ரூ.128 உயர்ந்து ரூ. 37,744-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை கிராமுக்கு அதிரடியாக ரூ.1 உயர்ந்து ஒரு கிராம் ரூ.77க்கும் ஒரு கிலோ ரூ.77,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.